Published:Updated:

மெனோபாஸ் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் புதிய ஆடை ; என்னவெல்லாம் செய்யும்?

menopause dress ( Fifty-One Apparel homepage )

பெண்களின் மெனோபாஸ் அறிகுறிகளைப் புரிந்துக் கொண்டு, அவர்களின் உடல் வெப்பநிலையையும், குளிர்ச்சியையும் சமநிலையில் வைத்திருக்க ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

மெனோபாஸ் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தும் புதிய ஆடை ; என்னவெல்லாம் செய்யும்?

பெண்களின் மெனோபாஸ் அறிகுறிகளைப் புரிந்துக் கொண்டு, அவர்களின் உடல் வெப்பநிலையையும், குளிர்ச்சியையும் சமநிலையில் வைத்திருக்க ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

Published:Updated:
menopause dress ( Fifty-One Apparel homepage )

மாதவிடாய் சுழற்சி நிற்கும் தருவாயில் பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, பிறப்புறுப்பு வறட்சி , திடீரென உடல் வெப்பநிலை அதிகரிப்பு, குளிர்ச்சி, இரவு நேரத்தில் வியர்த்தல் மற்றும் தூக்க பிரச்னைகள் போன்ற இன்னும் பல அறிகுறிகள் ஏற்பட்டு, மெனோபாஸ் நேரத்தில் பிரச்னையை அதிகப்படுத்தும். அதிலும் உடலின் வெப்பநிலை ஏறி இறங்குவதோடு, வருடக் கணக்கில் இந்த அறிகுறிகள் நீளும்.

இந்நிலையில் பெண்களின் மெனோபாஸ் அறிகுறிகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் உடல் வெப்பநிலையையும், குளிர்ச்சியையும் சமநிலையில் வைத்திருக்க ஆடை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

menopause
menopause

லண்டனைத் தளமாகக் கொண்ட 51 அப்பேரல் (Fifty-One Apparel) என்ற நிறுவனம், நாசாவின் டெக்னாலஜியை பயன்படுத்தி மெனோபாஸ் சமயத்தில் அணியக்கூடிய ஆடையை வடிவமைத்துள்ளது. அதாவது விண்வெளி வீரர்களின் கையுறைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும் `அவுட்லாஸ்ட்’ (outlast) தொழில் நுட்பத்தை, இந்த ஆடை வடிவமைப்பில் பயன்படுத்தி உள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லூயிஸ் நிக்கல்சன் என்பவர் இந்த நிறுவனத்தை 2017 -ம் ஆண்டில் தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ``மெனோபாஸின் போது பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் அநேகம். அவற்றை நிவர்த்தி செய்ய ஏதேனும் உள்ளதா என்பதைத் தேட ஆரம்பித்தேன். அதற்கான ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். ஆனால் சந்தைகளில், இரவுநேரத்தில் அணியும் நைட் டிரஸ்களைத் தவிர வேறு எதுவும் இல்லை.

menopause dress
menopause dress
Fifty-One Apparel homepage

அதனால் மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் ஆடை வடிவமைத்து உதவ நினைத்தேன். நான், நாசாவின் நிதியிலிருந்து தயாரிக்கப்பட்ட அவுட்லாஸ்ட் என்ற தயாரிப்பைக் குறித்துக் கேள்விப்பட்டபோது, அதை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்த நினைத்தேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Fifty-One Apparel என்ற இந்த நிறுவனத்தின் பெயருமே, மாதவிடாய் சுழற்சி நிற்கும் சராசரி வயதைக் குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. இந்த உடையை ஒருவர் அணிந்து கொள்ளும்போது நிலையான வெப்பநிலையை உடலில் நீடித்திருக்க உதவி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.