Published:Updated:

துருக்கி: ரோட்டில் வீசப்பட்ட புத்தகங்கள்; தூய்மைப் பணியாளர்கள் அமைத்த நூலகம்; குவியும் குழந்தைகள்!

நூலகம்
News
நூலகம்

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் பயன்படுத்தும் ஒரு சிறு நூலகமாக அமைக்கின்றனர்.


புத்தகங்கள் மனித வாழ்கையில் எண்ணற்ற இடங்களை பிடித்திருக்கிறது. சிலருக்கு படித்த புத்தகத்தை பிறருக்கு பகிர்வதில் நிறைவு. சிலருக்கு படித்த புத்தகத்தை அலமாரியில் அடுக்குவது நிறைவு. துருக்கி தலைநகர் அங்கராவில் மக்கள் தாங்கள் படித்த புத்தகங்களை அப்படியே ரோட்டில் விடுவதும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கியும் வந்துள்ளனர். துப்புரவு பணியாளர்களில் சிலர் புத்தகங்களை ஒருங்கிணைத்து வாசகர்களுக்கு வழங்கலாம் என்று முடிவுசெய்திருக்கின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக புத்தகங்களை சேகரிக்கின்றனர். பின்பு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் பயன்படுத்தும் ஒரு சிறு நூலகமாக அமைக்கின்றனர்.
" நூலகத்தை அமைப்பது குறித்து கலந்தாலோசித்தோம். பலரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் விளைவுதான் இந்த நூலகம் " என்கிறார் துப்பரவு பணியாளர் ஒருவர். துப்புர பணியாளர்களின் இந்த செயலை ஊக்குவிக்கும் நோக்கில் அந்த பகுதி மக்கள் மேலும் பல புத்தகங்களை அவர்களின் நூலகத்திற்கு வழங்கியுள்ளனர்.

நூலகம்
நூலகம்
CankayaBel-3

பின் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில், 2018 -ல் பொது நூலகம் தூய்மைப் பணியாளர்களால் அமைப்படுகிறது. இந்த நூலகம் நகரின் துப்புரவு துறையின் தலைமை இடத்திற்கு அருகில் பழைய செங்கல் சூலையில் அமைக்கப்பட்டுள்ளது.புத்தகங்கள் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் படிப்பதற்கு வழங்கப்படுகிறது.
' புத்தகங்களை கொடுப்பவர்கள் ஒரு புறம் , புத்தகத்தை வாங்கி வாசிப்பவர்கள் மறுபுறம் ' என்கிறார் அதை பராமரிப்பவர். தற்போது மீட்டெடுக்கப்பட்ட புத்தகங்கள் பள்ளிகள் , கல்வி நிறுவனங்கள் சிறைகளுக்கு கூட வழங்கப்படுகின்றன. துருக்கி பள்ளி ஆசிரியர்கள் புத்தகங்களை விரும்பிக் கேட்பதாகவும் கூறுகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நகரின் அரசு நூலகத்தை பாதுகாக்க முழு நேர ஊழியர்களை பணியமர்த்தி உள்ளது. நூலகம் பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளால் நிரம்பி இருக்குமாம். சில சமயங்களில் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளும் வருவார்களாம். நூலகத்தில் ஓய்வு பகுதியும் , வாடிக்கையாளர்களுக்காக செஸ் போட்டும் அமைக்கப்பட்டுள்ளது. சைக்கிளிங் செய்துவிட்டு தேநீர் பருகிக் கொண்டே புத்தங்களில் மூழ்கும் வாடிக்கையாளர்களும் உண்டு. ' என் வீட்டில் நூலகம் அமைக்க விரும்பினேன் , இப்பொழுது நகருக்கே அமைத்துவிட்டோம்' என்று நெகிழ்கிறார் 32 வயதான ஷெர்ஹட் தூய்மைப் பணியாளர். தற்போது 6000 புத்தகங்கள் பல பிரிவுகளில் மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.