Published:Updated:

`இடைவிடாமல் எரியும் அடுப்பு; தினமும் 30,000 பார்சல்கள்!' - இந்தியர்களால் நெகிழும் நியூயார்க்வாசிகள்

நியூயார்க்கில் உணவு  தயாரிக்கும் இந்தியர்கள்
நியூயார்க்கில் உணவு தயாரிக்கும் இந்தியர்கள்

கொரோனாவால் முடங்கிக் கிடக்கும் நியூயார்க் நகர மக்களுக்கு அட்சயபாத்திரமாக இந்தியர்கள் மாறியுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 1,032 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். 68,489 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். நியூயார்க் நகரத்தில் மட்டும் அதிகபட்சமாக 33,013 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நியூயார்க் நகரமே முடங்கிப் போயுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். போதிய உணவு கிடைக்காமல் ஏராளமானோர் பரிதவித்து வருகின்றனர்.

லாந்தரில் உணவு தயாரிக்கும் சீக்கியர்கள்
லாந்தரில் உணவு தயாரிக்கும் சீக்கியர்கள்

இதையடுத்து, நியூயார்க் நகர மேயர் பில் டி பேசியோ அங்குள்ள சீக்கிய மக்களின் குருத்வாராவை கடந்த ஞாயிற்றுக்கிழமை உதவிக்காக அணுகினார். தொடர்ந்து, குருத்வாராவிலிருந்து தினமும் 30,000 உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு திங்கள் கிழமை முதல் நியூயார்க்கில் பசியால் வாடும் மக்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

சத்தான காய்கறிகள், பருப்புகள், சாதம் உள்ளிட்ட வெஜிடபிள் உணவுகள் தயாரிக்கப்பட்டு வீடுகளுக்குச் சென்று போதிய பாதுகாப்பான முறையில் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. சோஷியல் டிஸ்டன்ஸ் கடைப்பிடிக்கப்பட்டு முகத்தில் மாஸ்க் அணிந்து சுத்தமான முறையில் குருத்வாராவில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இதுகுறித்து அமெரிக்க குருத்வாரா கமிட்டியைச் சேர்ந்த ஹிமத் சிங் கூறுகையில், ``உணவுகளை பாதுகாப்பான முறையில் தயாரித்து எங்களது தன்னார்வலர்கள் விநியோகித்து வருகின்றனர். தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள், முதியவர்களை அடையாளம் கண்டு உணவுப் பார்சல்களை வழங்கி வருகிறோம்.

உணவுப் பார்சல்கள்
உணவுப் பார்சல்கள்

அதேபோல், கொரோனா பாதித்து அமெரிக்காவில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் இந்திய மாணவர்களுக்கும் உணவு வழங்குகிறோம். இந்த இக்கட்டான சூழலில் நாங்கள் இந்தப் பணியைச் செய்கிறோம். நியூயார்க்கில் மட்டுமல்லாமல், சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களிலும் குருத்வாரா லாந்தர்களில் இடைவிடாமல் அடுப்புகள் எரிந்துகொண்டிருக்கின்றன.

``அடுத்த வாரம் ஆபத்து அதிகம்!”- எச்சரித்த ஆய்வு... அதிர்ச்சியடைந்த மோடி

குருத்வாராவில் உள்ள உணவு இருப்புகள் கையிலிருக்கும் வரை இந்தச் சேவையை மேற்கொள்வோம். ஏற்கெனவே நன்கொடைகள் வழியாக உணவுப் பொருள்கள் போதுமான அளவில் கையிருப்பில் வைத்துள்ளோம்'' என்றார்.

கொரோனா அச்சத்தை துச்சமாக மதித்து நியூயார்க் மக்களுக்கு, இந்தியர்கள் செய்யும் உதவி காரணமாக அமெரிக்கர் கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு