Published:Updated:

ஊரடங்குக்குப் பின்... சீனாவில் தனிமனித இடைவெளிக்கு உதவும் `க்யூட்’ 1 மீட்டர் தொப்பி!

ஒன் மீட்டர் தொப்பி!
ஒன் மீட்டர் தொப்பி! ( hangzhou.com )

`இந்த தொப்பி அணிவதன் மூலம் எங்களுடைய கோட்பாட்டை நாங்கள் பின்பற்றுகிறோம். `1 மீட்டர் தொப்பி அணிந்து, 1 மீட்டர் தள்ளி இருப்போம்.”

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஊரடங்கு முடிந்த பின்பு நம்முடைய பாதுகாப்பு பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கின்றது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு. இந்த நிலையில், இடைவெளியைக் கடைப்பிடிப்பது சாத்தியம்தான் என்று சீனப் பள்ளிக்குழந்தைகள் நிரூபித்துள்ளனர். மூன்று மாத ஊரடங்கிற்குப் பிறகு சீனக் குழந்தைகள் பள்ளிக்குத் தற்பொழுது திரும்பியுள்ளனர். அவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க' ஒரு மீட்டர் தொப்பி' அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

1 மீட்டர் தொப்பி!
1 மீட்டர் தொப்பி!
hangzhou.com

குழந்தைகள் வகுப்பறையில் அமர்ந்தமாறு வெளியாகியுள்ள காணொலியில், முகக் கவசத்துடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு மீட்டர் தொப்பியுடன் அமர்ந்துள்ளனர். ஒரு மீட்டர் தொப்பி என்பது சாதாரணமாக வீட்டில் தயாரிக்கப்பட்ட தொப்பியுடன் இருபக்கமும் குச்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த ஒரு மீட்டர் தொப்பி யோசனை முதலில் சீனாவில், ஸிஹிஜியாங் (zheijiang) மாகாணத்தில் ஹேங்குவாவில் உள்ள யாங்சியாங் ஆரம்ப பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு பயிலும் 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இந்த நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் தங்கள் பெற்றோர் உதவியுடன் இந்தத் தொப்பியைத் தயாரிக்க அறிவித்திருந்த நிலையில் தற்போது குழந்தைகள் தாங்கள் தயாரித்த தொப்பியுடன் பாடம் பயில்கின்றனர். இந்தத் தொப்பி அணிந்து இருப்பதால் மாணவர்கள் தங்கள் சக மாணவர்களிடம் நெருங்கிப் பழக முடியாது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க இது ஒரு சிறந்த வழியாக உள்ளது.

ஒரு மீட்டர் தொப்பி!
ஒரு மீட்டர் தொப்பி!
hangzhou.com

அந்தப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் ஹாங் ஃபெங் கூறுகையில், இது எங்கள் சொந்த கற்பனை முடிவாகும். அந்தத் தொப்பி அணிவதன் மூலம் எங்களுடைய கோட்பாட்டை நாங்கள் பின்பற்றுகிறோம். `ஒரு மீட்டர் தொப்பி அணிந்து, ஒரு மீட்டர் தள்ளி இருப்போம்' என்று அவர் கூறுகிறார்.

உலக அளவில் தொற்று ஆரம்பித்த வுஹான் மாகாணத்தில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீட்டிற்குத் திரும்பிவிட்ட நிலையில். ஷாங்காய், குவாங்ஸ்ஹவ் (Guangzhow),பீய்ஜிங் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்துக் கல்வி நிலையங்களும் தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு இலவசமாக முகக் கவசம் அளித்தல், வளாகத்தை கிருமிநாசியால் சுத்தப்படுத்துதல், தனிமைப்படுத்தும் பகுதியை ஏற்படுத்துதல் ஆகியவற்றைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒன் மீட்டர் தொப்பி!
ஒன் மீட்டர் தொப்பி!
hangzhou.com

சீனாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் அங்கு போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் சிறிது தளர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Photo Credit : hangzhou.com

அடுத்த கட்டுரைக்கு