Published:Updated:

``உலகில் ஒவ்வொரு 4 நொடிகளுக்கும் ஒருவர் பசிப் பட்டினியால் இறக்கிறார்!" - அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை

பசிப் பட்டினி

இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒவ்வொரு 4 நொடிகளுக்கும் யாரோ ஒருவர் பசிப் பட்டினியால் செத்து மடிந்துக் கொண்டிருப்பதாக சுமார் 200 தொண்டு நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கின்றன.

பசி
பசி

சுமார் 200-க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உலகளாவிய பசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில், ``21-ம் நூற்றாண்டில் மீண்டும் பஞ்சத்தை அனுமதிக்க முடியாது என்று உலகத் தலைவர்கள் வாக்குறுதியளித்தாலும், சோமாலியாவில் இன்று பஞ்சம் மீண்டும் நெருங்கிவிட்டது.

பசி
பசி

உலகம் முழுவதும், 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் இருக்கின்றனர். அதோடு, 345 மில்லியன் மக்கள் தற்போது கடுமையான பசியை அனுபவித்து வருகின்றனர். இது கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் 19,700 பேர் பட்டினியால் இறக்கின்றனர். அதிலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவலென்னவென்றால், உலகில் ஒவ்வொரு நான்கு நொடிகளுக்கும் ஒரு மனிதன் பட்டினியால் உயிரிழக்கிறான் என்பதுதான்" எனக் கூறப்பட்டிருக்கிறது.

பட்டினி, பஞ்சம்
பட்டினி, பஞ்சம்

மேலும், இது தொடர்பாக 75 நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள், பட்டினியின் அளவு அதிகரித்து வருவதை வெளிப்படுத்தும் விதமாக திறந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. இதில் கையெழுத்திட்ட ஏமன் குடும்ப பராமரிப்பு சங்கத்தைச் சேர்ந்த மொஹன்னா அஹ்மத் அலி எல்ஜபாலி(Mohanna Ahmad Ali Eljabali), ``விவசாயம் மற்றும் அறுவடை நுட்பங்களில் உள்ள அனைத்து தொழில்நுட்பங்களுடனும், இன்றும் இந்த 21-ம் நூற்றாண்டில் பஞ்சம் பற்றி பேசுவதென்பது மிகவும் பரிதாபத்துக்குரியது. இதுவொன்றும் ஒரு நாடு அல்லது ஒரு கண்டம் பற்றியது அல்ல. அதோடு, பசிக்கு எப்போதும் ஒரே காரணம் மட்டும் கிடையாது. இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அநீதியைப் பற்றியது" எனத் தெரிவித்திருக்கிறார்.