Published:Updated:

ஜெர்மனியில் ஆப்பிளை ஓரம் கட்டிய வெங்காயம்! #MyVikatan

இந்தியாவில் பற்றாக்குறையின் காரணமாக வெளிநாட்டுக்கு வெங்காய ஏற்றுமதியை  தடை செய்ததனால், இலங்கையிலிருந்து மட்டுமே இப்போது  வெங்காய வரத்து இருக்கிறது.

Representational Image
Representational Image

வெங்காயத்தின் விலை உயர்வு புத்தகங்களில் 'ஜோக்'காய் சிரித்தாலும் சாமானியனின் வெங்காய சாம்பார் கூட கேள்விக்குறியாகி விட்டது. அந்த விலை உயர்வு ஜெர்மனியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Representational Image
Representational Image

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து ஜெர்மனிக்கு சின்ன  மற்றும் பெரிய வெங்காயம் இறக்குமதியாகிறது. இங்கே கிடைக்கிற வெங்காயம் சற்று பச்சை நிறத்தில் இருக்கும். இதன் விலை 1.29 யூரோதான். ஆனால், இந்தியாவிலிருந்து வந்தவர்கள் நம்மூர் வெங்காயத்தில் பழகி, இந்த வெங்காயத்தின் மணம் பிடிக்காமல் இந்திய கடைகளில் நம்மூர் சிவப்பு  வெங்காயங்களையே பெரும்பாலும் வாங்குகின்றனர்.

இந்தியாவில்  பற்றாக்குறையின் காரணமாக வெளிநாட்டுக்கு வெங்காய ஏற்றுமதியை தடை செய்ததனால், இலங்கையிலிருந்து மட்டுமே இப்போது  வெங்காயவரத்து இருக்கிறது.

Representational Image
Representational Image

அதனால் சின்ன மற்றும் பெரிய வெங்காயங்களின் விலை உயர்ந்துள்ளது. சின்ன மற்றும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 5.99 யூரோவுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.470.13) கிடைக்கிறது. சில கடைகளில் இன்னும் அதிகம். ஜெர்மனியில் 2 கிலோ ஆப்பிளின் விலை என்ன தெரியுமா? 1.79 யூரோ தான்.

-ஜேசு ஞானராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/