Published:Updated:

நங்கனா குருத்வாரா விவகாரம்... பாகிஸ்தான் தரும் விளக்கம் என்ன?

நன்கானா சாகிப் குருத்வாரா

பாகிஸ்தானில் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நங்கனா குருத்வாரா விவகாரம்... பாகிஸ்தான் தரும் விளக்கம் என்ன?

பாகிஸ்தானில் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
நன்கானா சாகிப் குருத்வாரா

சமீபத்தில் இந்தியாவில் சி.ஏ.ஏ சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. இதனால், இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பாகத் தங்கியுள்ள வங்கதேசத்தவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்டவர்கள் வங்கதேசம் திரும்பியுள்ளனர். இந்திய எல்லையில் அவர்கள் சோதிக்கப்பட்டு வங்கதேச எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

குருத்வாராவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
குருத்வாராவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

சிலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. இந்தியாவில் அமல்படுத்தப்பட் சி.ஏ.ஏ., சட்டத்துக்குப் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள் ஆதரவு அளிக்கவில்லை. "மக்களிடையே இந்தச் சட்டம் பிரிவினையையே ஏற்படுத்தும்'' என்று பாகிஸ்தான் வாழ் இந்து மற்றும் சீக்கிய அமைப்புகள் கருத்து தெரிவித்திருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தானில் நிகழ்ந்த சம்பவம் சீக்கிய மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நங்கனா சாகிப் நகரத்தில் நங்கனா சாகிப் குருத்வாரா உள்ளது. லாகூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த குருத்வாரா, சீக்கிய மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலம். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் இங்குதான் பிறந்தார். இங்கு பதி என்று அழைக்கப்படும் சீக்கிய மத குருவின் மகள் ஒருவரை, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடத்திச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட பெண் இஸ்லாம் மதத்துக்கு மாறி திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னையைச் சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வர 30 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. கடத்தலில் தொடர்புடைய மூன்று இளைஞர்களை லாகூரில் போலீஸார் கைது செய்தனர். இந்த இளைஞர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த நிலையில், திடீரென்று இளைஞரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தலைமையில் நங்கனா குருத்வாராவுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது கற்களைக் கொண்டு தாக்கினர். தகாத வார்த்தைகளால் திட்டினர். குருத்வாரா மக்கள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி

அதேவேளையில், பாகிஸ்தான் இந்தச் சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நங்கனா சாகிப் நகரத்தில் உள்ள டீக்கடையில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இரு குழுவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்தது. நாட்டுக் குடிமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அரசு என்றுமே தவறியதில்லை. குறிப்பாக சிறுபான்மையினர் விஷயத்தில் நாங்கள் மிகுந்த அக்கறை காட்டுகிறோம்'' என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பஞ்சாப் மற்றும் உலகம் முழுக்க வாழும் சீக்கிய மக்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்ரிஸ்தரில் ஏராளமான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அகாலி தள எம்.எல்.ஏ மஜிந்தர் சிங், "பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. குருத்வாராக்களை மசூதிகளாக மாற்றுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

சிறுபான்மையினருக்கு அங்கே பாதுகாப்பில்லை. இந்த விஷயத்தில் இம்ரான் கான் மௌனம் காப்பது ஏன்? ஆனால், நாங்கள் பயப்படப் போவதில்லை. பழிக்குப் பழிவாங்குவோம்'' என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ளார். ''அராஜகம் தீமையை விளைவிக்கும். அன்பு, புரிதல் மற்றும் ஒருவருக்கொருவரை மரியாதையாக நடத்துவதே மக்கள் நலமாக வாழ வழிவகுக்கும்'' என்று ராகுல்காந்தி தன் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.