Published:Updated:

தானிஷ் சித்திக்கி எனும் ஊடக மாவீரன்... செய்தி எங்கே நிகழ்கிறதோ அங்கே இருந்தவனின் பயணமும், மரணமும்!

தானிஷ் சித்திக்கி

“ஒரு பணியின் நடுவே அதன் தன்மை மாறும்போது அதற்குத் தகுந்தவாறு நம்மை தகவமைத்துக் கொள்வது முக்கியம். அதை இதுவரையிலான என்னுடைய அனுபவங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.”

தானிஷ் சித்திக்கி எனும் ஊடக மாவீரன்... செய்தி எங்கே நிகழ்கிறதோ அங்கே இருந்தவனின் பயணமும், மரணமும்!

“ஒரு பணியின் நடுவே அதன் தன்மை மாறும்போது அதற்குத் தகுந்தவாறு நம்மை தகவமைத்துக் கொள்வது முக்கியம். அதை இதுவரையிலான என்னுடைய அனுபவங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.”

Published:Updated:
தானிஷ் சித்திக்கி

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்திய முதன்மைப் புகைப்படக்காரரார் தானிஷ் சித்திக்கி. இன்று ஆப்கானிஸ்தானில் ஆப்கன் பாதுகாப்புப் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே நிகழ்ந்த சண்டையில் செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு வயது 40.

தானிஷ் சித்திக்கி
தானிஷ் சித்திக்கி

சர்வதேச இதழியலின் முன்னணிச் செய்திப் புகைப்படக்காரராக விளங்கிய தானிஷ், செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்டிருக்கும் செய்தி, உலகளவில் பத்திரிகையாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆப்கானிஸ்தான் கந்தஹார் நகரின் ஸ்பின் போல்டாக் பகுதியில் தாலிபான்களுக்கு எதிராக ஒற்றை ஆளாகச் சுமார் 18 மணிநேரம் சண்டையிட்டுக் கொண்டிருந்த காவலர் ஒருவரை ஜூலை 13 அன்று மீட்கச் சென்ற குழுவுடன் இணைந்திருந்தார் தானிஷ். செய்திசேகரிப்புக்காக அந்த நிகழ்வு குறித்த தொடர் பதிவுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுவந்தார்.

கந்தாஹர்
கந்தாஹர்
Reuters

பாகிஸ்தானின் எல்லையில் பலோசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சாமனை இணைக்கும் பகுதியை தாலிபான்கள் கைப்பறிய பிறகு, அப்பகுதியில் மிகக் கடுமையான சண்டை நிலவிவருகிறது. பாதுகாப்பு மிக மோசமடைந்துவந்த நிலையில், கந்தஹாரில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்த தூதரக அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோரை ஜூலை 10 அன்று இந்திய அரசு இந்திய விமானப் படை விமானம் மூலம் திரும்ப அழைத்துக் கொண்டது.

“ஆப்கன் அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் பகுதி இது. எங்கிருந்தும், எந்நேரமும் தாலிபான்களின் தாக்குதலை எதிர்பார்த்தே முன்னேறிக் கொண்டிருந்தார்கள் ஆப்கன் பாதுகாப்பு வீரர்கள்; குறிப்பிட்ட புள்ளியை அடைந்ததும் அனைத்து திசைகளிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நான் பயணித்துக் கொண்டிருந்த ஹம்வீ வாகனத்தின் மீதும் RPG உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது” என்று தாக்குதல் நடத்தப்பட்ட காணொளியையும் தானிஷ் இணைத்திருந்தார்.

“15 மணிநேர தொடர் பயணம், செய்திசேகரிப்புக்குப் பிறகு 15 நிமிட இடைவெளி கிடைத்தது” என்று தரையில் ஓய்வாகப் படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் தானிஷ் பதிவிட்டிருந்த நிலையில், இன்று அவர் கொல்லப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி ஊடக உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

15 மணிநேர பணிக்குப் பிறகு ஓய்வெடுக்கும் தானிஷ்; ஜூலை 13
15 மணிநேர பணிக்குப் பிறகு ஓய்வெடுக்கும் தானிஷ்; ஜூலை 13

மும்பையைச் சேர்ந்த தானிஷ் சித்திக்கி, பொருளாதாரத்திலும், வெகுஜன தொடர்பியலிலும் பட்டம் பெற்றவர். முதலில் தொலைக்காட்சி செய்தியாளராக தன்னுடைய ஊடகப் பணியைத் தொடங்கிய தானிஷ், பிறகு செய்திப் புகைப்படக் கலைக்கு மாறினார். சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸில் 2010-ம் ஆண்டு பணியிடப் பயிற்சியாளராகச் சேர்ந்தது தொடங்கி இன்று பணியின்போதே மரணிக்கும் வரை மிகப் பெரிய தாக்கம் செலுத்திய ஏராளமான புகைப்படங்களை தானிஷ் எடுத்திருக்கிறார்.

“ஒரு பணியின் நடுவே அதன் தன்மை மாறும்போது அதற்குத் தகுந்தவாறு நம்மை தகவமைத்துக் கொள்வது முக்கியம். அதை இதுவரையிலான என்னுடைய அனுபவங்களிலிருந்து நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்” என்று ஊடகத்துறையில் தன்னுடைய கற்றல் குறித்து முன்னர் பேசியிருக்கிறார் தானிஷ். இவர் ஈராக், ஆப்கன் போர்கள், ரோஹிங்கியா அகதிகள் சிக்கல், ஹாங்காங் ஜனநாயகப் போராட்டங்கள், நேபாள பூகம்பம், 2020 சிஏஏ போராட்டங்கள், இந்தியாவில் பெருந்தொற்றின் தாக்கம் என சமகாலத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்வுகளைத் தன்னுடைய புகைப்படங்கள் வழியே ஆவணப்படுத்தியிருக்கிறார்.

மியான்மரின் ரோஹிங்கியா அகதிகள் சிக்கலை ஆவணப்படுத்தியமைக்காக, 2018-ம் ஆண்டு புகைப்படத்துக்கான புலிட்சர் விருது, சக புகைப்படக்காரர் அத்னன் அபிதியுடன் இணைந்து தானிஷுக்கு வழங்கப்பட்ட போது, இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

2012-ம் ஆண்டு போர் செய்தியாளர் ஆண்டனி ஷடீட், சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சம் பெற்றிருந்த வேளையில் அங்கு செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இறந்துபோனார்; அவருடைய மரணம் குறித்தும், போர் செய்தியாளர்கள் பணியின்போது இறப்பது, கொல்லப்படுவது குறித்தும் கட்டுரை ஒன்றை எழுதிய இதழியலாளர் பிரனாய் குப்தே அதில் இப்படி நிறைவுசெய்திருப்பார்:

ஆண்டனி ஷடீட்
ஆண்டனி ஷடீட்
“நீங்கள் ஓர் இதழியலாளராக எந்த அளவு மதிக்கப்படுகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல. இதழியலின் அடிப்படைகளை நீங்கள் ஒருபோதும் கைவிடமுடியாது. செய்தி எங்கு நிகழ்கிறதோ, அங்கு நீங்கள் இருக்க வேண்டும்; அது உங்கள் வாழ்க்கையையே கேட்பதாக இருந்தாலும்!”

தானிஷின் வாழ்வும், பணியும் அத்தகையது!