Published:Updated:

``ஆம்புலன்ஸில் மாற்றும்போது மாரடைப்பால் இறந்த கர்ப்பிணி'': ராஜினாமா செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!

pregnant woman ( pixabay )

கர்ப்பிணிக்கு, பச்சிளம் குழந்தைகளின் சிகிச்சை மற்றும் பராமரிப்பு தொடர்பான மருத்துவ சேவை பிரிவில் அனுமதிக்க இடம் இல்லாததால், அங்கிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மாற்றியுள்ளனர். எதிர்பாராத விதமாக அப்போது அந்தப் பெண் மாரடைப்பால் இறந்து போனார்.

போர்ச்சுக்கலின் சுகாதாரத்துறை அமைச்சராக மார்டா டெமிடோ அக்டோபர் 2018-ம் ஆண்டு பதவி ஏற்றார். மக்களிடையே தொற்று நோய்ப் பரவலைத் தடுக்க, தடுப்பூசி பிரசாரத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, பல அரசு அதிகாரிகளும் இவரைப் பாராட்டினர். ஆனால், சமீபத்தில் அவர் அமல்படுத்திய திட்டம் ஒன்று, கர்ப்பிணி ஒருவரின் இறப்புக்குக் காரணமாக அமைந்துள்ளது.

``ஆம்புலன்ஸில் மாற்றும்போது மாரடைப்பால் இறந்த கர்ப்பிணி'':  ராஜினாமா செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!
portugal.gov.pt

அதாவது கோடை விடுமுறையின்போது பல மருத்துவ மனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், அவசரகால மகப்பேறு சேவையை, வார இறுதி நாள்களில் மூடுவதாக அரசு முடிவு செய்துள்ளது. கர்ப்பிணிகள் சில நேரங்களில் தொலைதூர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்போது, ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்க்கட்சிகளும் நகராட்சியும் விமர்சித்துள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், சனிக்கிழமையன்று கர்ப்பிணி ஒருவரை, பச்சிளம் குழந்தைகளின் சிகிச்சை மற்றும் பராமரிப்பு தொடர்பான மருத்துவச் சேவை பிரிவில் அனுமதிக்க இடம் இல்லாததால், லிஸ்பன் சாண்டா மரியா மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மாற்றி உள்ளனர். எதிர்பாராத விதமாக அப்போது, அந்தப் பெண் மாரடைப்பால் இறந்து போனார்.

கர்ப்பிணியின் இறப்பு குறித்து வெளியான செய்திகளைத் தொடர்ந்து, கடும் விமர்சனங்கள் டெமிடோமீது பாய்ந்தன. அதைத் தொடர்ந்து தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி, ராஜினாமா செய்துள்ளார் டெமிடோ.

Death (Representational Image)
Death (Representational Image)

போர்ச்சுக்கல் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் டெமிடோவின் ராஜினாமா குறித்து வெளியிட்ட அறிக்கையில், ``டெமிடோ பதவி விலக முடிவு செய்தார். பதவியில் இதற்குமேல் தான் இருக்க வேண்டிய சூழல் இல்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டார்'' என்பதைக் குறிப்பிட்டுள்ளது.

பிரதம மந்திரி அன்டோனியோ கோஸ்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், ``அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன்; கோவிட்-19 பரவலுக்கு எதிராக வெற்றிகரமாகத் தடுப்பூசி பிரசாரத்தை ஏற்பாடு செய்த டெமிடோவின் பணிக்கு நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.