இலங்கை அரசு உணவு பொருட்கள், பெட்ரோல், தங்கம் என அனைத்து பொருட்களின் விலையையும் கணிசமாக உயர்த்தி உள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டிற்குள் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. தினசரி ஒரு மணிநேர மின்வெட்டும் ஏற்படுத்தபடுகிறது. வெளிநாட்டிலிருந்து வரும் இறக்குமதி பொருட்களுக்கான பணத்தை செலுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் இலங்கை மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசின் செயலை கண்டித்து கொழும்புவில் உள்ள அதிபரின் அலுவலத்திற்கு முன் எதிர் கட்சியின் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விலைவாசியை உயர்த்திய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே பதவி விலக வேண்டும் என போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசா கலந்து கொண்டு தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் அரசாங்கம் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதாகவும், அந்நியச் செலாவணி நெருக்கடியை உருவாக்குவதாகவும், எரிபொருள், சமையல் எரிவாயு, பால் பவுடர் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில், பொருளாதார சிக்கலைச் சந்தித்து வரும் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காக 7,500 கோடி ரூபாய் கடனுதவி அளித்துள்ளது இந்திய அரசு.