Published:Updated:

நித்யானந்தாவுக்கு முன்பே, `தனிநாட்டு'க்கு விண்ணப்பித்த இந்தியர் இவர்! 

சுயாஸ் தீக்‌ஷித்
சுயாஸ் தீக்‌ஷித்

```பிர் டெவில்' எனும் தேசம் இது இனிமேல் எனக்குச் சொந்தமானது. இனி இதன் பெயர் `கிங்டம் ஆஃப் தீக்‌ஷித்’. நான்தான் இந்தத் தேசத்தின் அரசன், என் தந்தை ஜனாதிபதி!" என்று அறிவித்துள்ளார்.

கடந்த ஒரு வாரமாக, நாம் காணும் பரபரப்புச் செய்தி, நித்யானந்தா தென் அமெரிக்க நாடுகளுள் ஒன்றான ஈக்வடார் நாட்டின் தனித்தீவு ஒன்றை வாங்கி அதற்கு `கைலாசா' என்று பெயரிட்டு தனது வலைப்பக்கத்தில் தனது நாடாகப் பிரகடனப்படுத்தியுள்ளார் என்பதுதான். மேலும், தனது கைலாசா நாட்டில் சம்ஸ்கிருதம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்றும் தேசிய மொழிகள் என்றும், நாட்டின் கொடியும் சின்னமும் அறிவித்திருக்கிறார்.

சுயாஸ் தீக்‌ஷித்
சுயாஸ் தீக்‌ஷித்
நித்யானந்தா உண்மையில் எங்கே இருக்கிறார்? #Nithyananda #Kailaasa

நிதி, உள்துறை, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி என அனைத்துத் துறைகளும் கொண்ட தனது கைலாசாவில் க்ரிப்ட்டோ கரன்சி என்ற பிட்காயின்கள் உபயோகிக்கலாம் என்று கூறியிருப்பதுடன், தனது கற்பனை தேசத்துக்கான பாஸ்போர்ட் மற்றும் விசாவைப் பெறுவதற்கு சனாதன இந்துக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தக் காலத்தில், இப்படி ஒரு மனிதன் தானே ஒரு நிலத்தை வாங்கி அல்லது கைப்பற்றி அதைத் தனது நாடாக அறிவிக்க முடியுமா என்று தேடினேன். மத்தியப்பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த சுயாஸ் தீக்‌ஷித் (Suyash Dixit) என்பவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் தனது நாடு என்று அறிவித்த `கிங்டம் ஆஃப் தீக்‌ஷித்” (Kingdom of Dixit) பற்றி ஆச்சர்யமான தகவல்களும் கிடைத்தன.

இந்தூரில் 40 பேரை வைத்து ஒரு ஐ.டி கம்பெனியை நடத்திவந்த சுயாஸ் தீக்‌ஷித்துக்கு வயது 26. வருடத்துக்கு 15 கோடிக்கும் மேலாக வருமான ஈட்டித்தந்தது இந்நிறுவனம்.

சுயாஸ் தீக்‌ஷித்
சுயாஸ் தீக்‌ஷித்

எகிப்து - சூடான் நாடுகளுக்கு இடையில் சுதந்திரத்துக்குப் பின் எல்லை பிரிப்பதில் வந்த சிக்கலில், செங்கடலுக்கு அருகில் சுமார் 2100 சதுர கிமீ பரப்பளவை `பிர் டவில்' என்ற பகுதி, இரு நாடுகளும் சொந்தம் கொண்டாட முடியாத டெர்ரா நல்லியஸ் (Terra Nullius) பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதனால் அப்பகுதி குறித்து யாரும் கவனம் செலுத்தவில்லை.

`நல்லியஸ்' என்றால் ரோமானிய மொழியில் யாருக்கும் சொந்தமில்லை என்று பொருள். எகிப்து மற்றும் சூடான் நாட்டுக்கு இடையே உள்ள `பிர் டவில்' போல, ஜப்பான் - சீனாவுக்கு இடையே உள்ள `ஷென்காக்கூ தீவுகள்', சீனா - பிலிப்பைன்ஸுக்கு இடையே உள்ள `பனாடக் ஷோல்..', இந்தியா - நேபாளம் இடையே உள்ள இமாலய மலைத்தொடரின் `ஷிவாலிக்' ஆகிய அனைத்தும் டெர்ரா நல்லியஸ் வகை நிலங்கள்தான்.

சுயாஸ் தீக்‌ஷித்
சுயாஸ் தீக்‌ஷித்

சர்வதேச சட்ட விதிகளின்படி, இரு நாடுகளுக்கிடையே சர்ச்சையில் உள்ள சிறிய பரப்பளவு நிலங்களை, தனக்குச் சொந்தம் என்று முதலில் கொடியை நடும் நாட்டுக்கே இந்த டெர்ரா நல்லியஸ் சொந்தம். அப்படி பிடிக்கப்பட்ட பிறகு ஏற்படும் சர்ச்சைகளை மனதில் கருதி இரு நாடுகளும் அதை அப்படியே விட்டுவிடுகிறார்கள். `பிர் டவில்' பற்றி படித்திருந்த சுயாஸ் தீக்‌ஷித், 24 வயதில் ஒரு சாஃப்ட்வேர் டெவலப்பிங் கான்ஃப்ரன்ஸுக்காக எகிப்து சென்றபோது, அங்கு செல்ல திட்டமிடுகிறார்.

அதன்படி, எகிப்து ராணுவத்தின் அனுமதியுடன், இரவு நேரத்தில் சாலை வசதி ஏதுமற்ற அந்தப் பாலைவனத்தின் உள்ளே ஜீப்பில் 150 கிமீ பயணிக்கிறார். பிறகு, விடிந்ததும் தான் வந்ததன் நினைவாக அந்தப் பாலைவன நிலத்தில் சூரியகாந்தி விதைகள் சிலவற்றை விதைத்து, ஒரு கொடியை நட்டு, சில புகைப்படங்களை எடுத்துக்கொள்கிறார்.

சுயாஸ் தீக்‌ஷித்
சுயாஸ் தீக்‌ஷித்

இந்தியாவுக்குத் திரும்பியவர் தனது முகநூலில், "பிர் டெவில், இனிமேல் எனக்குச் சொந்தமான தேசம். இனி, இதன் பெயர் `கிங்டம் ஆஃப் திக்‌ஷித்’. நான்தான் இந்தத் தேசத்தின் அரசன், என் தந்தை ஜனாதிபதி!" என்று அறிவிக்கிறார். முதலில், சாதாரணமாய் ஆரம்பித்த விஷயம் பிறகு சூடுபிடிக்கத் தொடங்கியது. மீடியாக்கள் அதைப் பற்றி பேசின; எழுதின. சட்டென்று பிரபலமாகி, அந்த வருடத்தில் கூகுளில் அதிக நபர்களால் தேடப்பட்டவரானார் தீக்‌ஷித்.

2100 சதுர கி.மீ பரப்பளவுள்ள நிலம். சிங்கப்பூர் நாட்டின் பரப்பை போல மூன்று மடங்கு. போட்டி இல்லாமல் இருக்குமா? ஒரு அமெரிக்கர், "இது ஏற்கெனவே நான் கொடி நட்ட நிலம். எனக்குத்தான் சொந்தம்!” என்று சில போட்டோக்களைக் காட்டுகிறார். ரஷ்யர் ஒருவரும் போட்டிக்கு வந்தார். ஆனால், சுயாஸ் தீக்‌ஷித் அலட்டிக்கொள்ளவேயில்லை.

எந்த நிலத்தையும் சொந்தம் கொண்டாட விதைகளை விதைப்பதும், மரம் செடிகளை நடுவதும் உலகம் முழுவதும் ஒப்புக்கொண்ட ஆதிகால வழிமுறை. அந்த முறையில் அங்கே சூரியகாந்தி விதைகளை முதலில் விதைத்தது நான்தான் என்பதால், அந்த நிலம் எனக்குத்தான் சொந்தம்.
என்றார் சுயாஸ் தீக்‌ஷித் கூலாக...
ஜூலியன் அசாஞ்சே முதல் நித்யானந்தா வரை... ஈக்வடார் என்னும் பூலோக சொர்க்கத்தின் ஸ்பெஷல் என்ன?

நித்யானந்தாவைப் போலவே, தனது நாட்டைப் பற்றியும் பல அறிவிப்புகளை வெளியிட்டிருக்கும் சுயாஸ் தீக்‌ஷித், தனது நாட்டில் உலகின் மிகப் பெரிய பசுமை இயக்கம், உணவு உற்பத்தி, பசி பட்டினியற்ற உலகம், சூரிய சக்தி போன்றவற்றில் முதலீடு என, பல வெளிநாடுகளை முதலீடு செய்ய அழைப்பதோடு, யாருக்காவது இந்த நாடு கிடைக்க வேண்டும் என்றால், போர் செய்து எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி அதிர்ச்சியையும் கொடுக்கிறார்.

ஆளாளுக்கு இப்படி தனிநாடு அந்தஸ்து கேட்டாலும், ஒரு நாட்டுக்கு அங்கீகாரம் அளிக்க என்று ஐ.நா-வில் சில வழிமுறைகள் இருக்கின்றன. அதைப் பெற இன்னும் முயன்று கொண்டிருக்கும் சுயாஸ் திக்‌ஷித், அந்த அமெரிக்கருடனும் சமாதானமாகச் சென்று யாருக்கு முதலில் அங்கீகாரம் கிடைத்தாலும் அடுத்தவர் பிர் டவில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று பரஸ்பரம் உறுதியளித்து இணைந்திருக்கிறார்கள்.

சுயாஸ் தீக்‌ஷித்
சுயாஸ் தீக்‌ஷித்
Vikatan

நித்யானந்தா தனி நாடு கோரிக்கைக்கு முன்னோடியாகப் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார் சுயாஸ் தீக்‌ஷித்.

அடுத்த கட்டுரைக்கு