Published:Updated:

`வன்புணர்வு நடந்தது 11 நிமிடங்களே; எனவே தண்டனையைக் குறைக்கிறேன்!' - நீதிபதியின் அதிர்ச்சி தீர்ப்பு

Court- Representational Image
Court- Representational Image ( Image by succo from Pixabay )

`தவறு செய்தவனைத் தண்டிப்பதை விட்டுவிட்டு இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?' என்கிற கருத்தை முன்வைத்து பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை அங்குள்ள கேளிக்கை விடுதியில் வைத்து பதினேழு வயது ஆணும் அவனது நண்பரும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

வெறும் பதினோரு நிமிடங்கள் மட்டுமே குறிப்பிட்ட அந்தப் பாலியல் வன்புணர்வு நீடித்ததால் குற்றம் இழைத்த நபரின் தண்டனைக்காலத்தை குறைப்பதாக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் நீதிபதி அளித்திருக்கும் தீர்ப்பு ஒன்று உலகம் முழுக்கக் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

sexual harassment
sexual harassment
`அதுவும் பாலியல் வன்புணர்வே!' - அதிரடி தீர்ப்புக்கு விளக்கம் அளித்த கேரள உயர் நீதிமன்றம்

இக்குற்றத்திற்கு தண்டனையாக அந்நாட்டு நீதிமன்றம் அவர்கள் இருவருக்கும் நான்கு ஆண்டுகள் மூன்று மாதம் சிறைத்தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் குற்றவாளிகளின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில்தான் மேற்சொன்னதுபோன்ற அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் குற்றவாளியின் தண்டனைக்காலம் மூன்று ஆண்டுகளாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை வழங்கியது ஒரு பெண் நீதிபதி என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

இத்தோடு அந்தப் பெண் நீதிபதி நின்றுவிடவில்லை. இந்தக் கூட்டுப் பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு நிகழ்வதற்கு முன்பு அந்தப் பெண் அவர்கள் இருவரிடமும் சமிக்ஞை செய்ததாகவும் தெரிவித்திருப்பது அந்நாட்டுப் பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

`தவறு செய்தவனைத் தண்டிப்பதை விட்டுவிட்டு இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றம் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?' என்கிற கருத்தை முன்வைத்து பெண்கள் அந்நாட்டில் உள்ள பேசெல் நகரத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின்முன் பெருங்கூட்டமாகக் கூடிப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Court -Representaional Image
Court -Representaional Image
``குழந்தை பெற்றுக்கொள்ள கணவருக்கு ஜாமீன் வேண்டும்!" - உயர்நீதிமன்றத்தை நாடிய மனைவி

`வெறும் பதினோரு நிமிடங்கள் என்று எப்படிச் சொல்லலாம்? பதினோரு நிமிடங்கள் என்பது மிகமிக அதிகம்’ என்கிற கோஷத்துடனும், நியாமற்ற இத்தீர்ப்புக்கு எதிராகப் பதாகைகளை ஏந்தியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பெண் நீதிபதி வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் இந்த வன்புணர்வு நிகழ்வதற்கு, பாதிக்கப்பட்டஇந்தப் பெண்ணும் ஒரு காரணம் என்று மறைமுகமாகச் சொல்வதுபோல இருக்கிறது என்று அவர் மேலும் தனது வருத்தத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு