Published:Updated:

`கஞ்சாவை விற்க, வளர்க்க அனுமதி; உணவுகளில் உபயோகிக்கலாம்!’ - தாய்லாந்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன?

கஞ்சா செடி

இதுமட்டும் இல்லாமல் கஃபே மற்றும் உணவகங்களில் கஞ்சா கலந்து தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களுக்கும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (tetrahydrocannabinol) அந்த உணவு பொருள்களில் 0.2 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும்.

`கஞ்சாவை விற்க, வளர்க்க அனுமதி; உணவுகளில் உபயோகிக்கலாம்!’ - தாய்லாந்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன?

இதுமட்டும் இல்லாமல் கஃபே மற்றும் உணவகங்களில் கஞ்சா கலந்து தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களுக்கும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (tetrahydrocannabinol) அந்த உணவு பொருள்களில் 0.2 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும்.

Published:Updated:
கஞ்சா செடி

பல நாடுகளில் கஞ்சா செடியை வளர்ப்பதும், விற்பதும் குற்றமாகக் கருதப்படுகிறது. பலரும் சட்டத்துக்குப் புறம்பாக கஞ்சா செடியை பயிரிட்டு வியாபாரம் செய்து தண்டனைக்கு உள்ளாகி உள்ளனர். கஞ்சா பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், தாய்லாந்து கஞ்சாவின் மீதிருந்த தடையை நீக்கி சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது.

கஞ்சா செடி
கஞ்சா செடி

இதனால், ஆசியாவிலேயே முதன்முறையாக கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கிய நாடாக தாய்லாந்து கருதப்படுகிறது. இனிமேல் தாய்லாந்தில் கஞ்சா செடியை பயிரிடுவதும், வர்த்தகம் செய்வதும், மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா செடியின் பாகங்களை உபயோகப்படுத்துவதும் சட்டப்படி குற்றம் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே இத்தனை நாள்கள் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பை பயன்படுத்தி போதைக்காக உபயோகப்படுத்துபவர்கள் மீது சட்டப்படி கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார், தாய்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல்.

கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனை

இதுமட்டும் இல்லாமல் கஃபே மற்றும் உணவகங்களில் கஞ்சா கலந்து தயாரிக்கப்படும் உணவுகள் மற்றும் பானங்களுக்கும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனோ ரீதியான விளைவுகளை உண்டாக்கும் மூலக்கூறான டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (tetrahydrocannabinol) அந்த உணவு பொருள்களில் 0.2 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும்.

பொது சுகாதார சட்ட அடிப்படையில், பொது இடங்களில் கஞ்சா பிடிப்பது இன்னும் குற்றமாகவே கருதப்படும். இவர்களுக்கு கடுமையான தண்டனைகளோடு, மூன்று மாத சிறைவாசமும், 800 டாலர் அபராதமும் விதிக்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism