Published:Updated:

பாகிஸ்தானுக்குள் சீறிப் பாய்ந்த இந்திய ஏவுகணை... ஒத்திகையா? விபத்தா?

பாகிஸ்தானைத் தாக்கிய ஏவுகணை

400 கிலோமீட்டர் தூரம் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் ரக ஏவுகணை இது என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் இருக்கும் ரகசிய ஏவுதளம் ஒன்றிலிருந்து கிளம்பியதாக சர்வதேச மீடியாக்கள் சொல்கின்றன.

பாகிஸ்தானுக்குள் சீறிப் பாய்ந்த இந்திய ஏவுகணை... ஒத்திகையா? விபத்தா?

400 கிலோமீட்டர் தூரம் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் ரக ஏவுகணை இது என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் இருக்கும் ரகசிய ஏவுதளம் ஒன்றிலிருந்து கிளம்பியதாக சர்வதேச மீடியாக்கள் சொல்கின்றன.

Published:Updated:
பாகிஸ்தானைத் தாக்கிய ஏவுகணை
மேய்ச்சலுக்குப் போகும் மாடு தவறுதலாக எல்லை தாண்டுவது கூட பெரும் சர்வதேசப் பிரச்னையாக மாற்றப்படும் அளவுக்குப் பதற்றம் நிறைந்தது இந்தியா - பாகிஸ்தான் எல்லை. ஜென்மப்பகை நிலவும் நிலையில், இந்திய ஏவுகணை ஒன்று எல்லை தாண்டிப் போய் பாகிஸ்தானில் விழுந்தால் என்ன ஆகும்?

பாகிஸ்தான் ராணுவம் கொந்தளித்து எதிர்ப்பு தெரிவித்தது. 'இது வழக்கமான பரிசோதனையின்போது தவறுதலாக ஏவப்பட்டு எல்லை தாண்டிச் சென்றுவிட்டது' என்று இந்தியா விளக்கம் கொடுத்தது. இதை ஏதோ எல்லை தாண்டிய தாக்குதல் போல பாகிஸ்தான் காட்ட முயன்றது. ஆனால், 'இது விபத்து போல நடந்த ஒன்றுதான். இதைப் பெரிதுபடுத்தக்கூடாது' என்று அமெரிக்கா பஞ்சாயத்தை பைசல் செய்துவிட்டது.

'ஒருவேளை நிஜமாகவே தாக்குதல் நடந்தால், பாகிஸ்தானால் எதுவுமே செய்ய முடியாது' என்ற உண்மையை இந்த 'விபத்து' வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் பாபர் இஃப்திகார்
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் பாபர் இஃப்திகார்
ISPR

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்ன நடந்தது? எப்படி நடந்தது? பார்க்கலாம்.

மார்ச் 9-ம் தேதி புதன்கிழமை மாலை மணி 6:43. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சானு என்ற நகரத்தில் குடியிருப்புப் பகுதியை ஏவுகணை ஒன்று தாக்கியது. குடியிருப்புகள் சேதமடைந்தாலும், நல்லவேளையாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

அடுத்த நாள் இரவு பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் பாபர் இஃப்திகார் இதை அறிவிக்கும்வரை இந்த விஷயம் ரகசியமாகவே இருந்தது. "இந்தியா பரிசோதனை செய்து பார்த்த ஏவுகணை ஒன்று, குறி தவறி பாகிஸ்தானுக்குள் வந்து விழுந்தது. அது சூப்பர்சானிக் ரக ஏவுகணை. வானத்தில் 40 ஆயிரம் அடி உயரத்தில் அது எல்லை தாண்டி பறந்து வந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் வான் எல்லையில் பறந்த விமானங்கள் எதையாவது அது தாக்கியிருந்தால், மோசமான விபத்து நிகழ்ந்திருக்கும்" என்று குற்றம் சாட்டினார் அவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஹரியானா மாநிலத்தில் இருக்கும் சிர்சா விமானப்படை தளத்திலிருந்தே இந்த ஏவுகணை வந்ததாக பாகிஸ்தான் சொன்னது. ராஜஸ்தானில் மகாஜன் ஃபயரிங் ரேஞ்ச் என்ற சோதனை தளம் உள்ளது. பல லட்சம் ஏக்கர் பாலைவனப் பகுதியான இங்கு பீரங்கிகளால் சுட்டு சோதனை செய்வார்கள். ஹரியானாவிலிருந்து இந்த இடத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையே குறி தவறி பாகிஸ்தானுக்குள் வந்ததாக அந்த நாடு குற்றம் சாட்டியது.

ஆனால், இந்தியா இதை மறுத்தது.

"இது வருந்தத்தக்க நிகழ்வு. ஹரியானாவிலிருந்து ஏவுகணை ஏவப்படவில்லை. அது குறி தவறவும் இல்லை. வழக்கமான பராமரிப்புப் பணிகளைச் செய்தபோது விபத்து நிகழ்ந்து, ஏவுகணை சீறிப் பாய்ந்து பாகிஸ்தானில் நுழைந்துவிட்டது. அரசு இதை மாபெரும் தவறாகக் கருதி உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது."
என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
Jose Luis Magana

ஏவுகணைகளைச் செலுத்துவதில் சில நடைமுறைகள் உண்டு. அது தவறுதலாக வெடித்துக் கிளம்புவதைத் தவிர்க்க சாஃப்ட்வேர் மற்றும் இயந்திரக் கட்டுப்பாடுகள் நிறைய உண்டு. அது எந்த இடத்தைத் தாக்க வேண்டும் என்று அதற்குள் இலக்குகளை ஜியோ லொக்கேஷனாகப் பதிவிடுவார்கள். ஒரு இலக்கை மாற்றி புதிய இலக்கை அதில் சேர்க்க முடியும். ரகசியக் குறியீட்டு எண்ணைப் பதிவிட்ட பிறகே ஏவுகணை உயிர்பெறும். அதன்பின் அது ஆட்டோ மோடுக்கு வந்து பாயத் தயாராகும்.

பொதுவாக ஏவுகணைகளில் வெடி ஆயுதங்கள் நிரப்பப்பட்டு, அதன்பிறகே அது தாக்குதலுக்குக் கிளம்பும். அந்த வெடி ஆயுதங்களே இலக்கிற்குச் சென்று பேரழிவை நிகழ்த்தும். நல்லவேளையாக இது பரிசோதனை ஏவுகணை என்பதால், வெடி பொருள்கள் இல்லை. அதனால் சேதாரம் குறைவாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

400 கிலோமீட்டர் தூரம் சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் பிரம்மோஸ் ரக ஏவுகணை இது என்று கூறப்படுகிறது. ஒருவேளை தவறுதலாக ஏவப்பட்டால், சில நொடிகளில் அதை உணர்ந்து வழியிலேயே அதை அழித்துவிடும் டெக்னாலஜியும் இப்போது வந்துவிட்டது. கம்ப்யூட்டரில் ஒரு கட்டளை பிறப்பித்தால், ஏவுகணை தன்னைத் தானே அழித்து தற்கொலை செய்துகொண்டுவிடும். ஆனால், பிரம்மோஸ் ஏவுகணையில் இந்த டெக்னாலஜி இல்லை.

பாகிஸ்தானை ஒட்டிய இந்திய எல்லையில் இருக்கும் ரகசிய ஏவுதளம் ஒன்றிலிருந்து கிளம்பியதாக சர்வதேச மீடியாக்கள் சொல்கின்றன.

பாகிஸ்தானுடன் நிரந்தரப் பிரச்னை இருப்பதால், இந்தியா தனது மேற்கு எல்லையில் ஏவுகணை சோதனைகளை நடத்துவது இல்லை. ஒடிஷா, அந்தமான் போன்ற கிழக்குக் கரைப் பகுதியில்தான் ஏவுகணை சோதனைகள் நடக்கும். அந்த நேரத்தில், வானில் பறக்கும் விமானங்களுக்கு அபாயம் நேரக்கூடாது என்பதால், விமானிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கையும் விடப்படும். ஏவுகணை சோதனைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு.

பாகிஸ்தானைத் தாக்கிய ஏவுகணை
பாகிஸ்தானைத் தாக்கிய ஏவுகணை

இதில் காமெடி என்னவென்றால், இந்த ஏவுகணை வந்ததை பாகிஸ்தானால் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பதுதான். அந்நிய ஏவுகணைத் தாக்குதல் நடக்கும்போது, அதை வழிமறித்து அழிக்கும் வான் பாதுகாப்பு சிஸ்டம் ஒன்று உண்டு. அது ரேடார் மூலம் ஏவுகணையை உணர்ந்து, தாக்கி அழித்துவிடும். பாகிஸ்தானும் இப்படி ஒரு பாதுகாப்பு சிஸ்டம் வைத்திருக்கிறது. ஆனால், இந்திய ஏவுகணை பாகிஸ்தான் வான் பரப்புக்குள் நுழைந்து, 3 நிமிடங்கள் 44 நொடி நேரம் பறந்து, 124 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அங்கு ஒரு நகரத்தில் விழுந்திருக்கிறது. பாகிஸ்தானால் இதைக் கண்டுபிடிக்கவோ, வழிமறிக்கவோ முடியவில்லை.

இந்திய ராணுவத் தரப்பிலிருந்து விஷயத்தைச் சொல்லும்வரை, இப்படி ஒரு ஏவுகணை எல்லை தாண்டி வந்ததை அவர்கள் உணரவில்லை.

"உண்மையாகவே போர்த் தாக்குதல் நடக்கும்போதும் இவ்வளவு பலவீனமாகத்தான் இருப்போமா?" என்று பாகிஸ்தானியர்கள் இப்போது அந்த அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism