Published:Updated:

`என்ன முதலைக்குப் பதில் ஹேண்ட் பேக் இருக்கு!' இங்கிலாந்து மிருகக்காட்சி சாலையில் ருசிகரம்!

விலங்குகள் ( Piqsels )

2018-ம் ஆண்டு லண்டன் விமான நிலையத்தில் இங்கிலாந்து எல்லை பாதுகாப்பு காவல் அதிகாரிகளால் இந்த ஹேண்ட் பேக் கைப்பற்றப்பட்டுள்ளது.

`என்ன முதலைக்குப் பதில் ஹேண்ட் பேக் இருக்கு!' இங்கிலாந்து மிருகக்காட்சி சாலையில் ருசிகரம்!

2018-ம் ஆண்டு லண்டன் விமான நிலையத்தில் இங்கிலாந்து எல்லை பாதுகாப்பு காவல் அதிகாரிகளால் இந்த ஹேண்ட் பேக் கைப்பற்றப்பட்டுள்ளது.

Published:Updated:
விலங்குகள் ( Piqsels )

இயற்கையின் படைப்பில் பெரிது சிறிதில்லை, அனைத்தும் சமம். ஆனால், மனித பேராசைக்காக பல உயிர்கள் காரணமேயின்றி வதைக்கப்படுகிறது. இவ்வுயிரினங்களைப் பாதுகாக்க சூழலின் மீது அக்கறை கொண்டு பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதிலும் சிக்காமல் தங்கு தடையின்றி உயிரினங்களை அழித்து வருவதும் நிகழ்ந்துகொண்டுதான் வருகிறது. உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் விலங்குகள் அவற்றின் தோலுக்காக கொல்லப்பட்டு மறைக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Hand bag
Hand bag

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், லண்டனில் உள்ள உயிர்க்காட்சி சாலை ஒன்றில், முதலை இருக்க வேண்டிய கூண்டில், முதலையின் தோளில் செய்யப்பட்ட ஹேண்ட் பேக் (Hand bag) வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்க்கும் அனைவருக்கும் விலங்குகளின் மீதான மனித ஆளுமையைக் குறிப்பிடும் வகையிலும், பல உயிரினங்கள் மற்றும் விலங்குகள் எத்தகைய அச்சுறுத்தலை மனிதர்களால் சந்தித்து வருகின்றன என்பதையும் நினைவுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உயிர்க்காட்சி சாலையில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படம், டாம் என்பவரால் ஆகஸ்ட் 2-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப் பட்டது. பலரின் கவனத்தையும் ஈர்த்த அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

முதலை
முதலை

கடந்த 75 வருடங்களில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமான சியாமி முதலைகள் மறைந்துவிட்டன. இது போன்ற பல முதலைகள் அவற்றின் தோலுக்காக வேட்டையாடப்பட்டு சட்ட விரோதமாக வர்த்தகம் செய்யப்படுகின்றன. 2018-ம் ஆண்டு லண்டன் விமான நிலையத்தில் இங்கிலாந்து எல்லை பாதுகாப்பு காவல் அதிகாரிகளால் இந்த ஹேண்ட் பேக் கைப்பற்றப்பட்டுள்ளது. உலகெங்கிலும் நடைபெறும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தின் தாக்கத்தை எடுத்துக் காட்டுவதற்காக, உயிர்க்காட்சி சாலையில் இந்த ஹேண்ட் பேக் ஒப்படைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.