Published:Updated:

வாரத்தில் நான்கு நாள்களே வேலை, முழு சம்பளம்; ஆரம்பமாகிவிட்டது முன்னோட்ட சோதனை முயற்சி!

Working Woman (Representational Image) ( Photo by Avel Chuklanov on Unsplash )

இந்த சோதனையில் சுமார் 70 நிறுவனங்கள் வரை அடுத்த ஆறு மாதத்தில் பங்கேற்க உள்ளன. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குறுகிய வார வேலை வழங்கப்படுவதோடு, முழு சம்பளம் அளிக்கப்பட உள்ளது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் 100 சதவிகித சம்பளம், 80 சதவிகித வேலை.

வாரம் முழுவதும் அலுவலகத்தில் வேலைபார்த்து, பிடித்த விஷயங்களில் கூட நேரம் செலவிட முடியாமல் பலரும் வாழ்வின் தொடர்ச்சியான ஓட்டத்தில் சலித்துப் போய் இருப்போம். இப்படி வைத்துக் கொள்வோம். நீங்கள் வாரத்தில் நான்கு நாள்கள் வேலை செய்தால் போதும், வாரம் முழுவதும் வேலைபார்க்கும் போது தரப்படும் சம்பளமும் கிடைக்கும்.

இதெல்லாம் எங்கே நடக்கப்போகிறது என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால், ஊழியர்களை வாரத்தில் நான்கு நாள்கள் மட்டும் வேலை செய்ய வைத்து, முழு சம்பளம் தர ஒரு முன்னோட்ட சோதனை நடத்தப்பட உள்ளது.

Money (Representational Image)
Money (Representational Image)

இந்த சோதனையில் சுமார் 70 நிறுவனங்கள் வரை அடுத்த ஆறு மாதத்தில் பங்கேற்க உள்ளன. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குறுகிய வார வேலை வழங்கப்படுவதோடு, முழு சம்பளம் அளிக்கப்பட உள்ளது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் 100 சதவிகித சம்பளம், 80 சதவிகித வேலை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இச்சோதனையை ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும், போஸ்டன் கல்லூரி நிபுணர்களும் இணைந்து செயல்படுத்த உள்ளனர். அலுவலக அமைப்பை கொண்ட 70 நிறுவனங்கள் சோதனையில் பங்கேற்கின்றன.

Work From Home
Work From Home

இந்த நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குறுகிய வார வேலை வழங்கப்படுவதோடு, இதற்கு முழு சம்பளம் அளிக்கப்பட உள்ளது.

‘கொரோனா தொற்று, மக்கள் தங்கள் வாழ்க்கையையும், வேலையையும் எவ்வாறு ஒழுங்கமைத்து வேலை செய்கிறார்கள் என்பதை சிந்திக்க வைத்தது. இப்போது, உலகின் முற்போக்கான மாற்றத்திற்கான ஒரு பகுதியாக எங்கள் ஊழியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், மக்களின் மன ஆரோக்கியம், நல்வாழ்வை மேம்படுத்தவும் இதைச் செய்கிறோம்’ என வடக்கு லண்டன், டோட்டன்ஹாமில் உள்ள பிரஷர் டிராப் ப்ரூவரியின் இணை நிறுவனர் சாம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.