Published:Updated:

`ஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் பார்ட்னர் அல்லது குடும்பத்தினரால் கொல்லப்படும் பெண்'- ஐ.நா பொதுச் செயலர்

அன்டோனியோ குட்டெரெஸ்

சமீபத்தில் நிகழ்ந்த ஷ்ரத்தா வால்கர் கொலையின் பின்னணியில் கிடைத்துள்ள தகவல்கள் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஆன்லைனில் பெண்களும் சிறுமிகளும் பல வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. சமீப காலங்களில் பெண்களுக்கு நெருக்கமானவர்களே சாதி, மதம், காதல், ஈகோ என ஏதோ ஒரு காரணத்துக்காகப் பெண்களைக் கொடூரமான முறையில் கொலை செய்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 

`ஒவ்வொரு 11 நிமிடத்துக்கும் பார்ட்னர் அல்லது குடும்பத்தினரால் கொல்லப்படும் பெண்'- ஐ.நா பொதுச் செயலர்

இந்நிலையில், நவம்பர் 25, `பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஒழிப்பு’ தினத்தன்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்தார். 

அதில் அவர், ``பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, உலகில் பரவலாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கு ஒரு பெண் அல்லது சிறுமி தன்னுடைய பார்ட்னர் அல்லது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்படுகிறார். 

அதோடு கோவிட் தொற்றின்போது ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள், மற்ற அழுத்தங்கள், பெண்கள் மீதான உடல் மற்றும் வன்முறைகளுக்கு இன்னும் அதிகமாக வழிவகுத்தது. 

சமீபத்தில் நிகழ்ந்த ஷ்ரத்தா வால்கர் கொலையின் பின்னணியில் கிடைத்துள்ள தகவல்கள் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஆன்லைனில் பெண்களும் சிறுமிகளும் பல வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர்.  

அல்தாப் பூனாவாலா - ஷ்ரத்தா
அல்தாப் பூனாவாலா - ஷ்ரத்தா

இந்தப் பாகுபாடு, வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் மனித குலத்தின் பாதியைக் குறிவைக்கிறது. இது அனைத்து துறைகளிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பங்கேற்பைக் கட்டுப்படுத்துகிறது. அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மறுக்கிறது. இது நம்முடைய உலகத்துக்குத் தேவையான சமமான பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியைத் தடுக்கிறது. 

வரும் 2026-ம் ஆண்டுக்குள் பெண்கள் உரிமை அமைப்புகள் மற்றும் இயக்கங்களுக்கு நிதியுதவியை 50 சதவிகிதம் வரை அரசு அதிகரிக்க முன் வர வேண்டும். பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பவும், நாம் அனைவரும் பெண்ணிய வாதிகள் என்று பெருமையுடன் அறிவிக்கவும் அனைவரும் முன் வர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.