Published:Updated:

விமானத்தில் பயணி மீது எச்சில் துப்பிய பெண்... நீதிமன்றம் விதித்த தண்டனை இதுதான்!

அந்தப் பயணியின் மீது எச்சில் துப்பியுள்ளார், பிச்சார்டோ. இதை விமானத்தில் இருந்த சக பயணிகள் செல்போனில் பதிவு செய்ய முயன்ற போது இன்னும் கோபமாகி, பணிபுரிபவர்களைத் தள்ளிவிட்டு களேபரத்தில் ஈடுபட்டார்.

விமானத்தில் பயணி மீது எச்சில் துப்பிய பெண்... நீதிமன்றம் விதித்த தண்டனை இதுதான்!

அந்தப் பயணியின் மீது எச்சில் துப்பியுள்ளார், பிச்சார்டோ. இதை விமானத்தில் இருந்த சக பயணிகள் செல்போனில் பதிவு செய்ய முயன்ற போது இன்னும் கோபமாகி, பணிபுரிபவர்களைத் தள்ளிவிட்டு களேபரத்தில் ஈடுபட்டார்.

Published:Updated:

விமானத்தில் பயணிக்கும்போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறும் பட்சத்தில், அப்பயணிகளுக்குத் தண்டனைகள் விதிக்கப்படும்.

நியூயார்க் நகரம் பிராங்க்ஸில் வசிக்கும் 32 வயது சிங்கிள் மதர் கெல்லி பிச்சார்டோ (Kelly Pichardo). இவர் 2021-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24 -ம் தேதி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தன் நண்பருடன் டல்லாஸிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு முதல் வகுப்பில் பயணித்துள்ளார். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, அவருடைய நண்பர் ஓரினத்தைக் குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். பின்னால் அமர்ந்திருந்த ஆப்பிரிக்க பெண் பயணி ஒருவர், பிச்சார்டோவை தோளில் தொட்டு, நீங்கள் பேசுவது சரியானதல்ல எனக் கடிந்துள்ளார்.

flight
flight

அத்துடன் நிற்காமல், அந்தப் பயணியின் மீது எச்சில் துப்பியுள்ளார் பிச்சார்டோ. இதை விமானத்தில் இருந்த சக பயணிகள் செல்போனில் பதிவு செய்ய முயன்றபோது, இன்னும் கோபமாகி பணிபுரிபவர்களைத் தள்ளிவிட்டு களேபரத்தில் ஈடுபட்டார். விமானக்குழு விரைந்து பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. விமானம் பீனிக்ஸ் நகருக்குத் திருப்பி விடப்பட்டது. அங்கு பிச்சார்டோவும் அவரின் நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில், ஆகஸ்ட் 29 அன்று அமெரிக்கா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டொமினிக் டபிள்யூ. லான்சா இப்பெண்ணுக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனையும், 9,123 அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதித்ததோடு, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னரும் 36 மாதங்களுக்குத் தொடர் மேற்பார்வையில் வைக்கப்படுவார் எனத் தீர்ப்பளித்தார்.

Flight (Representational Image)
Flight (Representational Image)
Image by RENE RAUSCHENBERGER from Pixabay

``விமானத்தில் தகாத முறையில் நடந்துகொண்ட செயல் களுக்காக பிச்சார்டோ மிகவும் வெட்கப்படுகிறார்'' என பிச்சார்டோவுக்காக வாதிட்ட வழக்கறிஞர் அனா பொடெல்லோ மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். அதோடு முகக்கவசம் அணிவது குறித்த கட்டாய அறிவிப்புகள் மற்றும் கோவிட் தொற்றுப்பரவல் கட்டுப்பாடுகள் பதற்றத்துக்கு வழிவகுத்தன என்றும் கோபமடைந்த பயணிகள், விமானப் பணிப்பெண்கள் மற்றும் பிற பயணிகளைத் தாக்கி, வசை பாடினர்” என்றும் தங்களுடைய தரப்பு வாதத்தை வைத்துள்ளார்.