ரஷ்யா உக்ரைனிடம் போர் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 3.3 மில்லியனுக்கும் அதிகமான பேர் அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து உக்ரைன் மக்களுக்கு உதவும் வகையில் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் அலுவலகத்திலிருந்து, உதவி கோருவதற்கான இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உதவிகளை எங்கு அனுப்புவது, நிவாரண பொருள்களை யாருக்கு அனுப்புவது உள்ளிட்ட விவரங்களை அறிய இந்த தளம் உதவுகிறது. வெளிநாடு மற்றும் உக்ரேனிய உதவி மையங்களின் தொடர்பு விவரங்களும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24 முதல் 3.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இப்போது 3.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளனர். அதே நேரத்தில் கிட்டத்தட்ட 6.5 மில்லியன் உக்ரைன் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். போர் தொடங்கியதில் இருந்து 3,328,692 உக்ரேனியர்கள் வெளியேறிவிட்டனர். சமீபத்தில் 58,030 பேர் வெளியேறி உள்ளனர்.

இது குறித்து பேசிய ஐ.நா அகதிகள் நிறுவனத்தின் தலைவர் பிலிப்போ கிராண்டி, ``குண்டுகள், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கண்மூடித்தனமான அழிவுகளுக்கு பயந்து மக்கள் தொடர்ந்து வெளியேறுகிறார்கள்" என்று கூறினார்.