Published:Updated:

இந்திய வீரர்கள் தலை துண்டிப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்களின் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி எல்லைப் பகுதியில் சுதாகர் சிங், ஹேம் ராஜ் என்ற 2 ராணுவ வீரர்களை, பாகிஸ்தான் ராணுவத்தினர் கொடூரமான வகையில் கொன்று தலைகளைத் துண்டித்தனர்.

இதில் ஒரு தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துச் சென்றுவிட்டனர். இந்த விவகாரம் இந்தியா - பாகிஸ்தானிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

##~~##
இந்த நிலையில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை மத்திய அரசு அளிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லாதது ஏன் எனவும், இது தொடர்பாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு மத்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.