Published:Updated:

இந்தியா திரும்புகிறார்கள் இத்தாலி வீரர்கள்

இந்தியா திரும்புகிறார்கள் இத்தாலி வீரர்கள்
இந்தியா திரும்புகிறார்கள் இத்தாலி வீரர்கள்
இந்தியா திரும்புகிறார்கள் இத்தாலி வீரர்கள்
புதுடெல்லி: இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரும் இன்று இந்தியா திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிகின்றன.
இத்தாலி தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்ற இருவரையும் திருப்பி அனுப்ப இயலாது என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதையடுத்து, இத்தாலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்க்கட்சிகள்  வலியுறுத்தின.
கொடுத்த வாக்குறுதியை இத்தாலி காப்பாற்ற வேண்டும் இல்லையென்றால் ஏற்படும் விளைவுகளுக்கு இத்தாலியே பொறுப்பு என்று பிரதமர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
##~~##
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடந்தபோது இத்தாலி தூதர் இந்தியாவை விட்டு வெளியேற உச்ச நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்தது.
இந்த விவகாரத்தில் இருநாடுகளும் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று ஐநா பொதுச்செயலர் பான் கி மூன் உள்பட பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரும் இன்று இந்தியா திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.