Published:Updated:

குரியனுக்கு மீண்டும் குடைச்சல் - சூடுபிடிக்கும் சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கு

திருவ‌னந்தபுரம்: சூரியநெல்லி கற்பழிப்பு விவகாரத்தில் ராஜ்ய சபா துணைத் தலைவர் குரியனின் கழுத்திற்கு மீண்டும் கத்தி வந்திருக்கிறது.

சூரியநெல்லி கற்பழிப்பு வழக்கை மறு விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அண்மையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட  நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட நாற்பது பேருக்கும் வழங்கப்பட்டிருந்த ஜாமீனை கடந்த வாரம் ரத்து செய்த‌து.

##~~##
இந்த நிலையில், ராஜ்ய சபா துணைத் தலைவர் குரியன் மீது இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட இன்னொரு வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தொடுபுழா நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பதிவு செய்து கொண்டு, குரியன் உள்ளிட்ட ஐந்து பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதையடுத்து, குரியனுக்கு மீண்டும் குடைச்சல் ஆரம்பித்திருக்கிறது.