Published:Updated:

சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு கிடைக்குமா? மகாராஷ்டிரா அரசு பரிசீலனை

சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு கிடைக்குமா? மகாராஷ்டிரா அரசு பரிசீலனை
சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு கிடைக்குமா? மகாராஷ்டிரா அரசு பரிசீலனை
சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு கிடைக்குமா? மகாராஷ்டிரா அரசு பரிசீலனை

மும்பை: நடிகர் சஞ்சய்தத்துக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி அனுப்பப்பட்ட கடிதத்தை மகாராஷ்டிரா மாநில ஆளுநர், மாநில அரசின் உள்துறையின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளார்.

கடந்த 1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சட்டவிரோத ஆயுதம் வைத்து இருந்த குற்றத்துக்காக இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது.

அவருக்கு அரசியலமைப்பு சட்டம் 161வது விதியின் கீழ் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர் மார்கண்டே கட்ஜு மராட்டிய ஆளுநர் சங்கர நாராயணனுக்கு கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தலைவர் அமர்சிங், நடிகை ஜெயப்பிரதா ஆகியோர் ஆளுநரை  நேரில் சந்தித்தனர். அப்போது சஞ்சய் தத்துக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கவர்னரிடம் அமர்சிங் கடிதம் கொடுத்தார்.

##~~##
இந்த நிலையில் அமர்சிங்கின் கடிதத்தை ஆளுநர் சங்கர நாராயணன், மாநில அரசின் உள்துறையின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்து உள்ளார். இந்த தகவலை ஆளுநர்  மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் உறவினர் அபிதேஜ் சிங் சாந்து, பொதுமன்னிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘சஞ்சய் தத்துக்கு கருணை காட்டி பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலம் அது நீதித்துறையை அவமதிப்பதாக அமையும். அரசியல் தலைவர்கள், நடிகர்கள், இதர தரப்பினர் இவ்வாறு குரல் எழுப்பி வருவது நாட்டில் நீதி அமைப்பை புண்படுத்துவதாக அமையும். நீதிமன்றம் விதித்த தண்டனையை சஞ்சய் தத் மனமார ஏற்றுக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும்’’ என்றார்.
பொதுமன்னிப்பு கோரப்போவதில்லை, சிறை செல்ல தயாராக இருப்பதாக ஏற்கனவே நடிகர் சஞ்சய் தத் கூறியது குறிப்பிடத்தக்கது.