Published:Updated:

மண்ணின் மைந்தர் கொள்கை பேசுபவர்களை ஒதுக்க வேண்டும்: மார்க்கண்டேய கட்ஜூ

மண்ணின் மைந்தர் கொள்கை பேசுபவர்களை ஒதுக்க வேண்டும்: மார்க்கண்டேய கட்ஜூ
மண்ணின் மைந்தர் கொள்கை பேசுபவர்களை ஒதுக்க வேண்டும்: மார்க்கண்டேய கட்ஜூ
மண்ணின் மைந்தர் கொள்கை பேசுபவர்களை ஒதுக்க வேண்டும்: மார்க்கண்டேய கட்ஜூ

மண்ணின் மைந்தர் கொள்கை பேசுபவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று   உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கூறினார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவுக்கு அருகில் உள்ள பிவாண்டி நகரில் "வேற்றுமையில் ஒற்றுமை' என்ற கருத்தரங்கு நடந்தது. அதில், கலந்து கொண்டு அவர் பேசுகையில், "இங்குள்ள சில அரசியல் கட்சிகளின் "மண்ணின் மைந்தர்" கொள்கைதான் என்ன? இந்த மாநிலத்தின் உண்மையான குடிமக்கள் யார் என்று அவர்கள் நினைக்கிறார்கள்? மராட்டியர்கள் கூட வெளியில் இருந்து இங்கு வந்தவர்கள்தான். மராட்டியர்கள் மட்டுமே இந்த மண்ணின் மைந்தர்கள் என்ற அவர்களது கொள்கை முற்றிலும் தேச விரோதமானது. அது அரசியலமைப்புச் சட்ட மீறல்.
 
நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் உரிமையை மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ளது. அதை மீறி, இதுபோன்ற கொள்கைகளைப் பரப்புபவர்களை சமூகத்தை விட்டே நீக்க வேண்டும். அவர்கள் முதலில் மும்பையில் வசிக்கும் தென்னிந்தியர்களைத் தாக்கினார்கள். அதன் பின், பீகாரிகளையும் மற்ற வட இந்தியர்களையும் தாக்கினார்கள்.

##~~##
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகியவற்றை இணைக்க வேண்டும். முன்பு இருந்ததைப் போலவே இந்த மூன்று நாடுகளும் ஒரே தேசமாக ஒன்று இணைவதற்கான நாள் வெகு தூரத்தில் இல்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மக்களைப் பிரிப்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய ஒரு போலி நாடுதான் பாகிஸ்தான்.
ஒரு நாகரிகமான சமூகம் என்பது சிறுபான்மையினரின் நிலையைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே தோல்வியடைந்து விட்டன. சிறுபான்மையினருக்கு உகந்த சூழலை உருவாக்கித் தர இந்த நாடுகளால் இயலவில்லை"  என்றார்.