7 பேரின் கருணை மனுவை நிராகரித்தார் பிரணாப் - விரைவில் தூக்கு?


புதுடெல்லி: புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று 7 பேரின் கருணை மனுக்களை நிராகரித்துள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அதி் 2 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த குர்மீத்சிங், 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரை படுகொலை செய்தார். இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குர்மீத்சிங், 26 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ், தனது சகோதரரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்கள்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தரம்பால், 1993ஆம் ஆண்டு இளம் பெண்ணை கொடூரமாக கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளி வந்த தரம்பால், கற்பழிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அரியானா முன்னாள் எம்.எல்.ஏ.யின் மகளான சோனியா, 2001ஆம் ஆண்டு ஹிசாரில் போதையில், பெற்றோர் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை படுகொலை செய்ததில் மரண தண்டனை பெற்றவர்.
##~~## |