Published:Updated:

8 பேருக்கு தூக்கை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

8 பேருக்கு தூக்கை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
8 பேருக்கு தூக்கை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
8 பேருக்கு தூக்கை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

புதுடெல்லி: குடியரசுத் தலைவரால், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜாபர் அலி, ராம்ஜி, சுரேஷ், குர்மீத் சிங், கர்நாடகாவைச் சேர்ந்த பிரவீன் குமார் உள்ளிட்ட 8 பேரின் கருணை மனுக்களை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 4ஆம் தேதி நிராகரித்தார்.

Advertisement

##~~##
இந்த நிலையில், கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேர் சார்பில் வழக்கறிஞர்கள் சாமிக் மற்றும் சௌவுத்ரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை அவசர வழக்காக நீதிபதிகள் சதாசிவம் மற்றும் இக்பால் ஆகியோர் நேற்றிரவு விசாரித்தனர்.
கருணை மனுக்களை பரிசீலிப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்தியது ஏன் என அப்போது கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக  4 வாரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர்.
அதுவரை கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 குற்றவாளிகளையும் தூக்கிலிட, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.