Published:Updated:

உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்

உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்
உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்
உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 2 நீதிபதிகள் நியமனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்துக்கு இரண்டு புதிய நீதிபதிகளை நியமித்து இன்று ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை முழுமையாகியிருக்கிறது.

பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அர்ஜுன் குமார் சிங்ரி மற்றும் மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஷரத் அரவிந்த் போப்டே ஆகிய இருவரையும் பணி மூப்பு அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  சிங்ரி, 2019 வரை பதவி வகிப்பார்.

டெல்லியைச் சேர்ந்த அர்ஜுன் குமார் சிங்ரி, சர்வதேச அளவில் அறிவுசார்சொத்து சட்டங்களில் புலமை பெற்ற 50 பேர்களில் இவரும் ஒவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கடந்தாண்டு பஞ்சாப், ஹரியானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

##~~##
நாக்பூரைச் சேர்ந்த போப்டே, உச்ச நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியானார். அதன் பின்னர் கடந்தாண்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 56 வயதான போப்டே உச்ச நீதிமன்றத்தி்ல் மேலும் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார். இதனால் இவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு உள்ளது.
அர்ஜுன் குமார் சிங்ரி மற்றும் ஷரத் அரவிந்த் போப்டே ஆகியோர் நியமனம் மூலம் 30 பேர் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை முழுமை அடைந்திருக்கிறது.