Published:Updated:

சரண் அடையும் காலக்கெடுவை நீட்டிக்க கோரி சஞ்சய் தத் மனு!

சரண் அடையும் காலக்கெடுவை  நீட்டிக்க கோரி சஞ்சய் தத் மனு!
சரண் அடையும் காலக்கெடுவை நீட்டிக்க கோரி சஞ்சய் தத் மனு!
சரண் அடையும் காலக்கெடுவை  நீட்டிக்க கோரி சஞ்சய் தத் மனு!

மும்பை: சரண் அடைவதற்கான காலக்கெடுவை இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரி சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக ஐந்து ஆண்டு சிறை தண்டனை பெற்ற சஞ்சய் தத், நான்கு வாரத்தில் சரண் அடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சஞ்சய் ததுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசுக்கு பலத் தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இந்தநிலையில், உச்ச நீதிமன்றம் விதித்தக் காலக்கெடு இன்னும் சில தினங்களில் நெருங்குகிறது. சஞ்சய் தத்தும் சிறைக்குச் செல்ல தயாராகிவருகிறார். சிறைக்கு செல்வதற்கு முன்பு அவரை  சினிமா பிரபலங்கள், வி.ஐ.பி.க்கள் அவரை சந்தித்தவண்ணம் உள்ளனர்.

##~~##
இந்தநிலையில், சரண் அடைவதற்கான காலக்கெடுவை இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரி சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே, தண்டனையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சஞ்சய் தத் மஹாராஷ்டிரா கவர்னருக்கு மனு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.