Published:Updated:

உச்ச நீதிமன்ற உத்தரவால் சஞ்சய் தத்துக்கு பின்னடைவு!

உச்ச நீதிமன்ற உத்தரவால் சஞ்சய் தத்துக்கு பின்னடைவு!
உச்ச நீதிமன்ற உத்தரவால் சஞ்சய் தத்துக்கு பின்னடைவு!
உச்ச நீதிமன்ற உத்தரவால் சஞ்சய் தத்துக்கு பின்னடைவு!

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சைபுனிஷா கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், இதே வழக்கில் சரணடைய கால அவகாசம்  கோரிய நடிகர் சஞ்சய் தத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி வெளியிட்டது. அதில், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

அதுபோல், தற்போது 71 வயதாகும் சைபுனிஷாவுக்கும் 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர் 4 வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் சரண் அடையும்படியும் உத்தரவிடப்பட்டது.

##~~##
இந்நிலையில், தான் நீதிமன்றத்தில் சரண் அடைய மேலும் கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் சைபுனிஷா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்து, ஏற்கெனவே விதித்த உத்தரவுப்படி, ஏப். 18 ஆம் தேதிக்குள் அவர் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனால் இதே வழக்கில் சரணடைய கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க கோரிய நடிகர் சஞ்சய் தத்துக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.