Published:Updated:

நடிகர் சஞ்சய் தத்துக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்

நடிகர் சஞ்சய் தத்துக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்
நடிகர் சஞ்சய் தத்துக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்
நடிகர் சஞ்சய் தத்துக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நீதிமன்றத்தில் சரணடைய நடிகர் சஞ்சய் தத்துக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

1993ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கினை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி வெளியிட்டது.

அதில், சட்ட விரோதமாக ஆயுதங்களை வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதோடு, 4 வார காலத்திற்குள் அதாவது ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் சரணடைய மேலும் 6 வார காலம் அவகாசம் அளிக்க கோரி  நடிகர் சஞ்சய் தத், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சௌகான் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, நடிகர் சஞ்சய் தத் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சஞ்சய் தத் பல படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தி்ல் சரணடைந்தால் பல கோடிரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கிறஞர், இதே வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சைபுனிஷா அவகாசம் கேட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. அதுபோல் நடிகர் சஞ்சய் தத் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றார்.

##~~##
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நடிகர் சஞ்சய் தத் நீதிமன்றத்தில் சரணடைந்த மேலும் 4 வார காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சைபுனிஷா நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கேட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது குறி்ப்பிடத்தக்கது.