Published:Updated:

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து நீதிபதி திடீர் விலகல்!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து நீதிபதி திடீர் விலகல்!
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து நீதிபதி திடீர் விலகல்!
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து நீதிபதி திடீர் விலகல்!

புதுடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விசாரணை பெஞ்சில் இருந்து விலகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்காக சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஏர்டெல் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுனில் பார்தி மிட்டல், எஸ்ஸார் குழும நிறுவனத்தைச் சேர்ந்த ரவி ரூயா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விலக்கு அளித்து இருந்தது.

##~~##
ஆனால் அவர்கள் மீதான புகாருக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக முதல் பார்வையிலேயே தெரியவந்து இருப்பதால், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு அவர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்ப தனி நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டு இருந்தார்.
இதை எதிர்த்து அவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், அனில் ஆர்.தவே ஆகியோர் அடங்கிய பெஞ்சின் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், இந்த பெஞ்சில் இருந்து நீதிபதி அனில் ஆர்.தவே தன்னை விடுவித்துக் கொண்டார்.  இதனால் 2ஜி வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.