Published:Updated:

தண்டனை ரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சஞ்சய் தத் மனு

தண்டனை ரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சஞ்சய் தத் மனு
தண்டனை ரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சஞ்சய் தத் மனு
தண்டனை ரத்து கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகர் சஞ்சய் தத் மனு

புதுடெல்லி: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தி்ல் நடிகர் சஞ்சய் தத் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு கீழ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.

இதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடிகர் சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், சஞ்சய் தத் மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்ததோடு, ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

##~~##
இந்த நிலையில், நீதிமன்றத்தில் சரணடைய மேலும் 6 வார காலம் அவகாசம் அளிக்க கோரி  நடிகர் சஞ்சய் தத், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தில் சரணடைய நடிகர் சஞ்சய் தத்துக்கு மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.
இதனிடையே, தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தி்ல் நடிகர் சஞ்சய் தத் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார். சஞ்சய் தத் சார்பில் டெல்லியை சேர்ந்த சட்டக் குழு உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.