தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் செய்துள்ள தவறுகள் ஒருபுறமிருக்க, உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மதிக்காமல் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர்களாக இருந்த அதிகாரிகள் செய்த தவறுகள்தான், அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவதற்கும் போராடுவதற்கும் முதன்மையான காரணங்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை ஒன்றைத் தமிழக அரசு வெளியிட்டது (G.O.(Ms) No. 72 dated: 28.05.2018) அதன்படி மாவட்ட ஆட்சியர் அந்த ஆலையைப் பூட்டி சீலும் வைத்துள்ளார். ஆனால், ‘ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் எங்களுக்குத் திருப்தி இல்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குக் கொள்கை முடிவை அரசு எடுக்கவேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் இப்போது அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை உள்பட ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கைகள் யாவும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. அவர்கள் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், இந்தப் பிரச்னையில், ஆட்சியாளர்களைவிடவும் அதிகார வர்க்கத்தினர் செய்துள்ள தவறுகளே அதிகம். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையை வழிமொழிந்துதான், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையே குறைபாடுகள் நிரம்பியதாக உள்ளது. அதனால்தான், இந்த அரசாணை பலவீனமாக இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என 28.09.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மீண்டும் ஆலையை இயக்குவதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் அனுமதி பெற்றது. அப்படி அனுமதி பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை ஸ்டெர்லைட் நிர்வாகம் கொடுத்தது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடுத்த ‘நேஷனல் ட்ரஸ்ட் ஃபார் க்ளீன் என்விரான்மென்ட்’ என்ற அமைப்புக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், ஸ்டெர்லைட் ஆலை தந்துள்ள பொய்த் தகவல்களைச் சுட்டிக்காட்டி அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 136-ன் கீழ் உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என வாதிட்டார்.

“ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உண்மைகளை மறைத்துள்ளது என்பதிலும், தவறான தகவல்களைத் தந்துள்ளது என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால், அந்த ஆலையை மூடத்தான் வேண்டியிருக்கும்” எனக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் தாமிரத்தின் பயன்பாடு, அதில் வேலைசெய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை, அந்த ஆலையால் மத்திய மாநில அரசுகளுக்குக் கிடைக்கும் வரி வருவாய் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் செய்த தவறுமீது நடவடிக்கை எடுக்காமல் விடுவதாகவும், அவர்களின் மேல்முறையீட்டை ஏற்பதாகவும் கூறியது.

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுசெய்வதற்காக, 100 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. “தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அந்தத் தொகையை டெபாசிட் செய்து, அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் மண் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்குத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஆலோசனை மேற்கொண்டு, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை செயலாளரின் ஒப்புதலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஒருவேளை வட்டித் தொகை போதவில்லையெனில், முதல் தொகையான 100 கோடி ரூபாயில் ஒரு பகுதியைச் சுற்றுச்சூழல் துறையின் செயலாளரின் அனுமதியுடன் பயன்படுத்திக்கொள்ளலாம்” என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, 2013-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் 100 கோடி ரூபாய் தூத்துக்குடியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் மாவட்ட ஆட்சியரின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டது. 25.03.2018 வரை அதற்கு 41 கோடியே 68 லட்ச ரூபாய் வட்டியாகச் சேர்ந்துள்ளது. இந்த வட்டித் தொகையை உச்ச நீதிமன்ற ஆணையின்படி அப்பகுதி மக்களின் சுகாதார வசதிகளுக்காகவும், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காகவும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தியிருக்க வேண்டும். இது குறித்துச் சுற்றுச்சூழல் ஆர்வலர் தர்மேஷ் ஷா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மனு செய்தார். அவர் பெற்றுள்ள தகவல்கள், மாவட்ட நிர்வாகம் உச்ச நீதிமன்ற ஆணையை மீறியிருப்பதைக் காட்டுகின்றன.

வட்டித் தொகையில் சுமார் ஆறு கோடியே 83 லட்சம் ரூபாய் மட்டுமே இதுவரை மாவட்ட நிர்வாகத்தால் செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் மண், தண்ணீர் மாசுகளை அகற்றிச் சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. அதற்காகத்தான் அந்தத் தொகையைச் செலவிட்டிருக்க வேண்டும். ஆனால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பூங்கா அமைப்பதற்கு 30 லட்ச ரூபாயையும், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த புதூர் பாண்டியாபுரத்தில் பூங்கா அமைப்பதற்கு 30 லட்ச ரூபாயையும் , தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் கூடுதல் வசதிகள் செய்து தருவதற்கு 30 லட்ச ரூபாயையும் மாவட்ட நிர்வாகம் செலவு செய்துள்ளது. இரண்டு இடங்களில் வெள்ளத் தடுப்புச் சுவர்களைக் கட்டுவதற்கு 50 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. கழிவுநீர்க் கால்வாய்கள் கட்டுவதற்குச் சுமார் 63 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் வார்டுகள் அமைக்க 40 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. முட்புதர்களை அகற்றுவதற்கு 8 லட்ச ரூபாய் இந்த நிதியிலிருந்து செலவிடப்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அந்த நிதியைப் பயன்படுத்தும்போது, அதற்குச் சுற்றுச்சூழல் துறையின் செயலாளரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்தச் செலவுகளுக்கெல்லாம் சுற்றுச்சூழல் துறை செயலாளர் எப்படி ஒப்புதல் அளித்தார் என்பது வியப்பாக இருக்கிறது.

2005-ம் வருட ‘நீரி’ அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் ‘சாம்பிள்களில்’ தாமிரம், காரீயம், குரோமியம், காட்மியம், ஃப்ளூரைடு, குளோரைடு ஆகியவற்றின் அளவு இந்திய குடிநீர் தரக்கட்டுப்பாட்டு அளவுக்கு மிக அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த மாசுகளைக் குறைத்துத் தண்ணீரின் தரத்தை மேம்படுத்துவதற்கே மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். அதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியிருக்க வேண்டும். அப்படி எதையும் மாவட்ட ஆட்சியர் செய்யவில்லை. 28.03.2018 அன்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு உள்ளேயும் வெளியிலுமாக 15 தண்ணீர் சாம்பிள்களைச் சேகரித்துத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. மனிதர்களின் நரம்பு மண்டலத்தையும் சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடியதும், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை நாசம் செய்யக்கூடியதுமான காரீயம் அபாயகரமான அளவில் தண்ணீரில் கலந்திருப்பது தெரிய வந்தது. அந்த நிதியை மாவட்ட ஆட்சியர் முறையாகச் செலவிட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு நடந்தபோது அந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தால் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுகாதாரப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அப்படி ஒருமுறைகூடச் சோதனை நடத்தப்படவில்லை. அதை மாவட்ட ஆட்சியர் கண்காணித்திருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மருத்துவப் பரிசோதனை நடத்தாவிட்டால், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட நிதியைக் கொண்டாவது அதை அவர் செய்திருக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 250 மீட்டர் பரப்பளவுக்கு மரங்கள் கொண்ட ‘பசுமைப் போர்வை’ உருவாக்கப்பட வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்திருந்த நிபந்தனை பின்பற்றப்படாததால்தான், காற்று மாசு அதிகமானது என்பது அந்த ஆலைக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஒன்று. எனவே, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமின்றி, தூத்துக்குடி நகர் முழுவதுமே பசுமைப் போர்வையை அதிகரிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்அந்த நிதியைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், முப்பது கிராமங்களில் வெறும் இரண்டாயிரம் மரக்கன்றுகள் மட்டும் 20 லட்ச ரூபாய் செலவில் நடப்பட்டுள்ளன.

2013-ம் ஆண்டு அந்த ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டபோது, தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. அந்தக் குழு 25 பரிந்துரைகளை அளித்தது. ஆலையிலிருந்து திறந்து விடப்படும் சல்ஃபர் டை ஆக்ஸைடால் காற்று பெருமளவுக்கு மாசடைகிறது. அதனால், மக்களுக்குச் சுவாசக் கோளாறுகள் வருகின்றன என அந்தக் குழு தெரிவித்தது. காற்றில் கலக்கும் சல்ஃபர் டை ஆக்ஸைடின் அளவைக் கண்காணிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. அந்த ஆலைக்குள் கழிவுப்பொருள்களாக சுமார் நான்கு லட்சம் டன் ஜிப்சமும், 14 லட்சம் டன் தாமிரக் கசடுகளும் தேங்கிக் கிடக்கின்றன அவற்றை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தக் குழு தெரிவித்திருந்தது. அவற்றையாவது, அந்த நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் செய்திருக்கலாம்.

ஸ்டெர்லைட் ஆலையை ஒட்டியுள்ள சில்வர்புரத்தைச் சேர்ந்த 60 பேருக்குப் புற்றுநோய் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. மற்ற பகுதிகளில் எத்தனை பேருக்குப் புற்றுநோய் தாக்கியுள்ளது என்பதைக் கண்டறியவோ, அதற்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதற்கோ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அந்த நிதியைப் பயன்படுத்தியிருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை. தூத்துக்குடியின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக உச்ச நீதிமன்றத்தால் ஒப்படைக்கப்பட்ட நிதியில், சுமார் ரூ. 35 கோடியைச் செலவு செய்யாமல் வைத்திருந்தது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, அது ஒரு கிரிமினல் குற்றம். 2013 ஜூலையிலிருந்து இதுவரை, தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர்களாக இருந்த அத்தனை பேரும் இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள்தான்.

சட்டத்துக்கு உட்பட்டு அறவழியில் தமது குறைகளை எடுத்துச்சொன்ன அப்பாவி மக்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்குப் புறம்பாகச் செயல்பட்டு தூத்துக்குடி மக்களுக்கு மிகப்பெரிய சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தியுள்ள மாவட்ட ஆட்சியர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?