‘‘ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்து என்பது ‘சேஃப்டி வால்வு’ போன்றது. மாற்றுக்கருத்தை அனுமதிக்காவிட்டால், அது வெடித்துவிடும்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஓர் எச்சரிக்கையைப்போல தெரிவித்துள்ள கருத்து எளிதாகக் கடந்துவிடக் கூடிய ஒன்றல்ல.

மகாராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகான் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாக, இடதுசாரி சிந்தனையாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களான டெல்லி சட்டப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுதா பரத்வாஜ், எழுத்தாளர் கௌதம் நவ்லகா, மும்பை வழக்கறிஞர்கள் வெர்னான் கான்சால்வஸ், அருண் ஃபெரைரா, ஹைதராபாத் கவிஞர் வரவர ராவ் ஆகிய ஐந்து பேரை புனே போலீஸார் ஆகஸ்ட் 28-ம் தேதி திடீரென கைது செய்தனர். கோவாவில் வசித்துவரும் பேராசிரியரும் அம்பேத்கரியல் ஆய்வாளருமான ஆனந்த் தெல்தும்டேவும் கைது பட்டியலில் இருந்தார்; பணிநிமித்தமாக மும்பைக்குச் சென்றுவிட்டதால், கைதிலிருந்து அவர் தப்பினார்.

இந்த ஆறு பேரின் வீடுகளிலும், ஹைதராபாத் பேராசிரியர் சத்யநாராயணா, பத்திரிகையாளர் குமாரநாத், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமூகப்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டான் சுவாமி ஆகியோரின் வீடுகளிலும் புனே போலீஸார் சோதனை நடத்தினர். ‘சட்டவிதிகளை அப்பட்டமாக மீறி, இந்தத் தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டன. இவர்களைக் கைது செய்தது சட்டவிரோதமானது’ என்று நாடு முழுவதுமுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஜனநாயகவாதிகள், இடதுசாரிகள், முற்போக்காளர்கள் எனப் பலரும் கண்டனக் குரலை எழுப்பினர்.

கைது செய்யப்பட்ட ஐவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மூத்த வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக் உள்பட ஐந்து பேர் உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 29-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கான்வில்கர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர வழக்காக எடுத்துக்கொண்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி முறையிட்டார்.

விசாரணையின்போது, பீமா கோரேகான் வன்முறையில் ஐந்து பேருக்கும் தொடர்பு உள்ளது; அரசுக்கு எதிராக இவர்கள் ஒரு பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்க இருந்தார்கள்; அதற்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்; இவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று புனே போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

ரொமிலா தாப்பர் உள்ளிட்டோரின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, ராஜீவ் தவான் ஆகியோரும் வாதிட்டனர். “அமைதியாக மாற்றுக்கருத்துகளை முன்வைத்ததைத் தவிர அவர்களுக்கும் பீமா கோரேகான் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அப்படி இருக்கையில் ஒரே நேரத்தில் தேடுதல்வேட்டையையும் கைது நடவடிக்கையையும் மேற்கொள்கிறார்கள்” என்று கடும் அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தினர். அரசு தரப்போ, ஐவரையும் வெளியில் விட்டுவிடக்கூடாது எனப் பிடிவாதம் பிடித்தது. இறுதியாக உத்தரவை வாசித்த நீதிபதிகள், “செப்டம்பர் 5-ம் தேதிக்குள் மகாராஷ்டிர அரசின் சார்பில் இந்த விவகாரம் தொடர்பாகப் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்; ஐந்து பேரையும் சிறையில் அடைக்கக் கூடாது; வீட்டுக்காவலில் வைத்திருக்கலாம்’’ என வித்தியாசமான உத்தரவையும் நீதிபதிகள் வழங்கினர். ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டம்’ என்ற கொடும் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவர்களை, இந்தியாவின் பல நகரங்களிலிருந்து புனே அழைத்துச் செல்லக் கீழமை நீதிமன்றங்கள் கண்ணை மூடிக்கொண்டு அனுமதி வழங்கியதை நீதிபதிகள் கண்டித்தனர்.

கைதுசெய்யப்பட்ட வரவர ராவ் உள்ளிட்டோரை ‘நகர்ப்புறத்து நக்ஸல்கள்’ என பி.ஜே.பி மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் தரப்பில் பலரும் பரபரப்பைக் கிளப்பினர். அதற்கு எதிராகவும், கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் ஜனநாயகக் கருத்தாளர்களும் ‘MeeTooUrbanNaxal’ (நானும் நகர்ப்புற நக்சல்தான்) என்று தங்களின் சமூகவலைதளப் பக்கங்களில் கொந்தளித்தனர்.

கைதுசெய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவரான சுதா பரத்வாஜ், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்) தேசியச் செயலாளராக உள்ளார். இந்தக் கைது குறித்து பி.யு.சி.எல் அமைப்பின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சுரேஷிடம் பேசினோம்.

‘‘சுதா பரத்வாஜ், 30 ஆண்டுகளாக சத்திஸ்கர் மாநிலத்தில் மனித உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடிவருகிறார். ஆதிவாசி மக்களின் சட்டரீதியான உரிமைகளுக்காக, இயற்கைவள அழிப்புக்கெதிராகச் செயல்பட்டு வருகிறார். கடத்தல்காரர்களுக்காகவும் கொள்ளைக்காரர்களுக்காகவும் வாதாடும் வழக்கறிஞரை மட்டும் தொழில்ரீதியாக பார்க்கிறார்கள். மனித உரிமைகளுக்காகச் சட்ட உதவிகளைச் செய்யும் வழக்கறிஞர்களை மாவோயிஸ்ட் என முத்திரை குத்துகிறார்கள். இது எப்படிச் சரியாகும்? அரசியல் அமைப்புகளின் செயல்பாடு ஒரு வரம்புக்குள் நின்றுவிடுகையில், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பணி முக்கியமானதாக இருக்கிறது. அதை முடக்கப் பார்க்கிறார்கள். இந்தக் கைது நடவடிக்கையின் மூலம் அரசை விமர்சிக்கும் கருத்துகளை யாரும் முன்வைக்கவே கூடாது என மிரட்டப் பார்க்கிறார்கள்” என்றார்.

- இரா.தமிழ்க்கனல்