Published:Updated:

கருணை மனு தாமதத்தால் அசாம் தாஸின் தூக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

கருணை மனு தாமதத்தால் அசாம் தாஸின் தூக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!
கருணை மனு தாமதத்தால் அசாம் தாஸின் தூக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!
கருணை மனு தாமதத்தால் அசாம் தாஸின் தூக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: 12 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த எம்.என்.தாஸ் என்பவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த  மகேந்திரநாத் தாஸ் என்பவர் 1991, 1994 ஆம் ஆண்டுகளில் தலா ஒரு கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தாஸுக்கு கவுகாத்தி சிறப்பு நீதிமன்றம் 1997ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து தாஸ், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் விதி்த்த தூக்குத் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, 1999ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு, தாஸ் சார்பில் கருணை மனு அளிக்கப்பட்டது.

ஆனால், இந்த கருணை மனு 12 ஆண்டுகள் கழித்து 2011 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தார்.

இதையடுத்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு தனது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளது தவறு என்றும் இந்த முடிவு மிகவும் காலம் தாழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தூக்குத் தண்டனையை  ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தாஸ் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது இன்று  தீர்ப்பளித்த நீதிபதி சங்வி, முகோபாத்யாயா கொண்ட அமர்வு, 12 ஆண்டுகளுக்கு பிறகு தாஸின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ரத்து செய்ததோடு, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

15 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாப்பை சேர்ந்த புல்லரின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

##~~##
தற்போது, அசாம் மாநிலத்தை சேர்ந்த தாஸின் கருணை மனு 12 ஆண்டுகள் கழித்து நிராகரிக்கப்பட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இதனால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரும், அவரது குடும்பத்தினரும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.