Published:Updated:

`குடும்பத்தினரிடம் பேச விரும்புகிறேன்!’ - 8 மாதங்களுக்குப் பின்னர் நிர்மலா தேவி விருப்பம்

`குடும்பத்தினரிடம் பேச விரும்புகிறேன்!’ - 8 மாதங்களுக்குப் பின்னர் நிர்மலா தேவி விருப்பம்
`குடும்பத்தினரிடம் பேச விரும்புகிறேன்!’ - 8 மாதங்களுக்குப் பின்னர் நிர்மலா தேவி விருப்பம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் கணிதத்துறை உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்காகப் 3 பேரும் இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி லியாகத் அலி ஜனவரி 10-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

`குடும்பத்தினரிடம் பேச விரும்புகிறேன்!’ - 8 மாதங்களுக்குப் பின்னர் நிர்மலா தேவி விருப்பம்

`செய்யாத குற்றத்துக்காக வழக்கில் சம்பந்தமே இல்லாத நான் 250 நாள்களாகச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறேன். ஆனால், எனக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. என்னைப் பற்றி குடும்பத்தினர் நன்கு புரிந்துகொண்டதால் எனக்குப் பிரச்னை இல்லை. அதனால் விசாரணையின்போது வந்து சந்தித்துச் செல்கின்றனர். இல்லையெனில் வேறு ஏதாவது பிரச்னை ஆகியிருக்கும். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என முருகன் வேதனையோடு கூறினார்.

`குடும்பத்தினரிடம் பேச விரும்புகிறேன்!’ - 8 மாதங்களுக்குப் பின்னர் நிர்மலா தேவி விருப்பம்

`கணவர் என்னைச் சந்திக்க வரவில்லை. வழக்கு சம்பந்தமாகக் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் பேச உள்ளேன். அவர்கள் என்னைச் சந்தித்தால் நன்றாக இருக்கும். ஆனால், வழக்கு விவரங்களை தற்போது வெளியில் சொல்ல முடியாது' என பேராசிரியர் நிர்மலாதேவி கூறினார்.