Published:Updated:

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிரான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அப்போது, கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்பட தடை விதிக்கப்படுமா, திட்டம் கைவிட உத்தரவிடப்படுமா என தெரியவரும்.
 

கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு தடை விதிக்கப்படுமா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கடந்த 2011 ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த புகுஷிமா அணுஉலை விபத்தை தொடர்ந்து கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி அந்த பகுதி மக்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையப் பணிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அணுஉலை எதிர்ப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நடந்த விசாரணையில், அணுக்கழிவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மனுதாரர்கள் நீதிமன்றத்தில் பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக பாதுகாப்பு விதிகளை முறையாக செயல்படுத்தும்வரை அணு உலையை இயக்கத் தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அணு உலையில் தரமற்ற கருவிகள் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.


##~~##
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை இன்று அளிக்கவுள்ளது.
அப்போது, கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்பட தடை விதிக்கப்படுமா, திட்டம் கைவிட உத்தரவிடப்படுமா என தெரியவரும்.