Published:Updated:

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்!

கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி  அளித்தது உச்ச நீதிமன்றம்!
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்!
கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி  அளித்தது உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், நாட்டின் வளர்ச்சி, பொதுமக்கள் தேவைக்காக அணுமின் நிலையம் தேவை என்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011 ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த புகுஷிமா அணுஉலை விபத்தை தொடர்ந்து கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி அந்த பகுதி மக்கள் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையப் பணிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அணுஉலை எதிர்ப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நடந்த விசாரணையில், அணுக்கழிவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மனுதாரர்கள் நீதிமன்றத்தில் பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக பாதுகாப்பு விதிகளை முறையாக செயல்படுத்தும்வரை அணு உலையை இயக்கத் தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது. விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,  உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது.

பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்தியாவின் அணுசக்தி கொள்கையை மதிப்பதாக கருத்து தெரிவித்தனர்.

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பை ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்ட குழுக்கள் ஒரே கருத்தை தெரிவித்துள்ளன என்றும் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளதாக குழுக்கள் அறிக்கை அளித்துள்ளன என்றும் தங்கள் தீர்ப்பில்கள் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

##~~##
நாட்டின் வளர்ச்சி, பொதுமக்கள் தேவைக்காக அணுமின் நிலையம் தேவை என்றும்  பயன்படுத்தப்பட்ட எரிபொருளை சேமிக்கும் முறையை மத்திய அரசு கையாள வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
மேலும், கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான குற்ற வழக்குகளை திரும்பப் பெற பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.