Published:Updated:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்: சிபிஐ புதிய பிரமாண பத்திரம் தாக்கல்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்: சிபிஐ புதிய பிரமாண பத்திரம் தாக்கல்
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம்: சிபிஐ புதிய பிரமாண பத்திரம் தாக்கல்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை சட்ட அமைச்சரிடம் காட்டப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்பாக மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரிடமும், பிரதமர் அலுவலக அதிகாரிகளிடமும் சிபிஐ காண்பித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அறிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. 9 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

##~~##
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய  சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா, சுரங்க ஒதுக்கீட்டு முறைகேட்டில் குற்றவாளிகள் யாரையும் தப்பவிட மாட்டோம் என்று கூறியிருந்தார்.
மேலும், நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில், விசாரணை நேர்மையாக நடைபெற்று வருவதாகவும் சிபிஐ இயக்குனர் தெரிவித்தார்.
சிபிஐ விசாரணை அறிக்கையில் எந்தவித திருத்தமும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.