Published:Updated:

கூடங்குளம் அணுஉலைக்கு அனுமதி: வருந்தத்தக்கது என்கிறார் அச்சுதானந்தன்

திருவனந்தபுரம்: கூடங்குளம் அணுஉலை செயல்பட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து வழங்கியுள்ள தீர்ப்பு வருந்ததக்கது என்று கேரளா மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் தொடர்ந்த வழக்கில் அவர்களது மனுவை தள்ளுபடி செய்ததோடு, அணுஉலை செயல்படலாம்  என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு குறித்து, கூடங்குளம் அணு உலைக்கு
எதிர்ப்பு தெரிவித்து வந்த கேரள முன்னாள் முதல்வரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவருமான அச்சுதானந்தன் கூறுகையில், "ரஷ்யாவின் உதவியுடன் கூடங்குளத்தில் தொடங்கப்படும் அணுஉலையில் பொருத்தப்பட்டுள்ள எந்திரங்கள் போதுமான பாதுகாப்பற்றது என்று நிபுணர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.

##~~##
இது அந்த பகுதி மனித இனத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.  இந்த பாதுகாப்பு பிரச்னையில் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நடவடிக்கை எடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் அணுஉலை எதிர்ப்பாளர்கள் தொடர்ந்த வழக்கில் அணுஉலை செயல்பட உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவானது மிகவும் வருந்தத்தக்கதாகும்” என்றார்.