Published:Updated:

புல்லரின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி மனைவி மனு தாக்கல்!

புல்லரின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி மனைவி மனு தாக்கல்!
புல்லரின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி மனைவி மனு தாக்கல்!
புல்லரின் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி மனைவி மனு தாக்கல்!

புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு குற்றவாளி புல்லருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவரது மனைவி மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி தேவேந்திரபால்சிங் புல்லர். இவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி புல்லர் தாக்கல் செய்த மனுவை, கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதியன்று விசாரித்த உச்ச நீதிமன்றம்,  தீவிரவாத செயலில் ஈடுபட்டதால் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி அக்கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

##~~##
இதனையடுத்து இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரும் மனு ஒன்று புல்லர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இம்மனு மீதான தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே தமது கணவரை அரசு தூக்கிலிட்டுவிடலாம் என தாம் அஞ்சுவதாகவும், எனவே மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பு வரும் வரை தூக்குத்தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி புல்லரின் மனைவி இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி இம்மனுவை தாக்கல் செய்தார்.

இம்மனுவை  உடனடியாக விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம்,  தண்டனை வழங்கிய பெஞ்சே இந்த மனுவை விசாரிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.