Published:Updated:

`இந்து பெண் - இஸ்லாமிய ஆண் திருமணம் செல்லாது!’ - உச்ச நீதிமன்றம்

`இந்து பெண் - இஸ்லாமிய ஆண் திருமணம் செல்லாது!’ - உச்ச நீதிமன்றம்
`இந்து பெண் - இஸ்லாமிய ஆண் திருமணம் செல்லாது!’ - உச்ச நீதிமன்றம்

ந்து பெண்ணை, இஸ்லாமிய ஆண் திருமணம் செய்தால் அது முறையற்றது என்பதோடு, செல்லவும் செல்லாது என்று  தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவர்களுக்குப் பிறக்கும் வாரிசுக்குத் தந்தையின் சொத்தில் உரிமை உள்ளதா என்பது குறித்தும் தனது தீர்ப்பை வெளியிட்டுள்ளது. 

`இந்து பெண் - இஸ்லாமிய ஆண் திருமணம் செல்லாது!’ - உச்ச நீதிமன்றம்

கேரளாவைச் சேர்ந்த மொகமத் இலியாஸ் என்ற இஸ்லாமியர், வள்ளியம்மா என்ற இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் ஷம்சுதீன். தந்தை காலமான பின்னர் தந்தையின் சொத்தில் ஷம்சுதீன் உரிமை கோரியபோது, இலியாஸின் உறவினர்கள் அதைக் கொடுக்க மறுத்தனர். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த கீழ்க்கோர்ட்டும், கேரள உயர் நீதிமன்றமும் ஷம்சுதீனுக்குத் தந்தையின் சொத்தில் பங்கு கோர உரிமை உள்ளது எனத் தீர்ப்பளித்தது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இலியாஸின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் எம்.எம்.ஷன்டனாகவுடர் ஆகியோரடங்கிய அமர்வு, ஒரு இந்துப் பெண்ணுக்கும் இஸ்லாமிய ஆணுக்கும் இடையே நடைபெற்ற திருமணம் செல்லாது என்றும், அது முறையற்றது என்றும் கூறியுள்ளது. 

`இந்து பெண் - இஸ்லாமிய ஆண் திருமணம் செல்லாது!’ - உச்ச நீதிமன்றம்

``இஸ்லாமிய சட்டப்படி, திருமணம் என்பது ஒரு சிவில் ஒப்பந்தம். திருமணத்தைப் பொறுத்தவரை, 3 வகையான திருமணங்கள் உள்ளன. ஒன்று, செல்லத்தக்கது (valid), இரண்டாவது முறையற்றது (irregular) மற்றும் மூன்றாவது செல்லாதது (void). 

இஸ்லாமிய ஆண் ஒருவர், விக்கிரக அல்லது நெருப்பை வழிபாடு செய்யும் பெண் ஒருவருடன் செய்துகொள்ளும் திருமணம் செல்லாதது மட்டுமல்லாது முறையற்றது. இந்துக்கள் உருவப் படங்களுக்கும்/சிலைகளுக்கும் பூக்களைத் தூவுவது, அலங்காரம் செய்வது எனப் பல வகைகளில் வழிபடும் நிலையில், இந்துப் பெண் ஒருவர், இஸ்லாமிய ஆண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வது முறையற்றது என்பதை இந்தச் சூழ்நிலையில் வலியுறுத்த இந்த நீதிமன்றம் வலியுறுத்துகிறது. 

அதேசமயம், இதுபோன்ற திருமணத்தில் மனைவிக்கு, கணவரின் மறைவுக்குப் பின்னர், அவரின் சொத்திலிருந்து ஜீவாதாரத்துக்கான உரிமையை மட்டும் பெற உரிமை உள்ளது என்றாலும், முழு சொத்துக்கும் வாரிசு உரிமை கொண்டாட முடியாது. அதே சமயம் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு, தந்தையின் சொத்தில் பங்கு கோர உரிமை உள்ளது. 

`இந்து பெண் - இஸ்லாமிய ஆண் திருமணம் செல்லாது!’ - உச்ச நீதிமன்றம்

எனவே, இவ்வழக்கில் கீழ் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரிதான் என்று கூறி, மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்கிறோம்" என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும் கூறியுள்ளனர்.