Published:Updated:

தண்டனை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பை தடுக்கும் சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி:  உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பை தடுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றால், அன்றைய தினமே எம்.பி.க்கள், மற்றும் எம்.எல்.ஏ.க்களின் பதவியை உடனடியாக பறிக்கலாம் எனவும், சிறையில் இருந்தால் போட்டியிட தடை விதிக்கலாம் என்றும் கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், அவசர சட்டம் கொண்டு வந்து கிரிமினல் எம்..பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என கண்டனம் தெரிவித்திருந்தது.

இருப்பினும்  தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கத்தை தடுக்கும் அவசர சட்டத்தைக் கொண்டு வர அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அதன்படி அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது.

##~~##
இந்நிலையில் இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தண்டனை பெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கத்தை தடுக்கும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
 
அடுத்த கட்டுரைக்கு