Published:Updated:

'அரசியல் எஜமானர்களின் வாய்மொழி உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்றவேண்டாம்!'

விகடன் விமர்சனக்குழு
'அரசியல் எஜமானர்களின் வாய்மொழி உத்தரவை  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்றவேண்டாம்!'
'அரசியல் எஜமானர்களின் வாய்மொழி உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்றவேண்டாம்!'
'அரசியல் எஜமானர்களின் வாய்மொழி உத்தரவை  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்றவேண்டாம்!'

புதுடெல்லி: தங்களது அரசியல் எஜமானர்களின் வாய்மொழி உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐ.ஏ எஸ். அதிகாரிகளின் பணி நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக முடிவு செய்ய சிவில் சர்வீஸ் வாரியம் ஒன்றை அமைக்க கோரியும்,ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் இடமாற்றத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதால் ஏற்படும் நிர்வாக சீர்கேடு, ஊழல் உள்ளிட்டவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கோரி  உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒரு குறிப்பிட்ட பொறுப்பில் இருந்து மாற்றம் செய்வதற்கு குறைந்தபட்ச கால வரையறையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.

ஐ.ஏ.ஸ். அதிகாரிகளின் பணி காலத்தை நிர்ணயிப்பதன் மூலம் அவர்கள் செம்மையாக செயல்படவும் அதன் மூலம் நல்ல நிர்வாகம் நடைபெறவும் வழி வகுக்கும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மூன்று மாதத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும்.

அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அதிகாரிகள் பலிகடா ஆவதை தடுப்பதற்கான நடவடிக்கையாக சிவில் சர்வீஸ் வாரியத்தை மூன்று மாத காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

##~~##
அடிக்கடி அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், அப்படி இருந்தால்தான் அரசின் கொள்கைகளூம், நலத்திட்டங்களும் ஏழை மக்களை சென்றடையும் என்றும் நீதிபதிகள் கூறினர்.