Published:Updated:

லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

Vikatan Correspondent
லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!
லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!
லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் தற்போது லாலு சிறையில் உள்ளார்.

##~~##
இந்நிலையில், ஜாமீன் கேட்டு லாலு பிரசாத் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஜாமீனுக்கான நிபந்தனையை கீழ் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.