Published:Updated:

ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவராக முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

 ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவராக முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவராக முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
 ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவராக முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு முடியும் வரை ஸ்ரீனிவாசன் பி.சி.சி.ஐ தலைவராக முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

6வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான 3 பேர் கொண்ட கமிட்டியை உச்ச நீதிமன்றம் நியமித்தது.

பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு, அந்தக் கமிட்டி 170 பக்கம் கொண்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து சூதாட்ட விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்பதற்காக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் இருந்து ஸ்ரீனிவாசன் விலக வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், கவாஸ்கரை இடைக்கால தலைவராக நியமித்தது.

இதனிடையே, வாக்குமூல விவரங்களைக் கோரி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் தொடர அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீனிவாசன் மனு தாக்கல் செய்தார்.

மேலும், ஐபிஎல் தலைமை செயல் அதிகாரி பதவியில் சுந்தர்ராமன் தொடர தடை பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்திய முட்கல் கமிட்டியின் அறிக்கையில் ஸ்ரீனிவாசன் பெயர் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள்,   ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு முடியும் வரை ஸ்ரீனிவாசன் பி.சி.சி.ஐ தலைவராக முடியாது என்றும், பி.சி.சி.ஐ.- க்குள் எவ்வித செயல்பாட்டையும் மேற்கொள்ளக்கூடாது என்றும்  திட்டவட்டமாக கூறினர்.

மேலும், ஐ.பி.எல் தலைமை செயல் அதிகாரி பதவியில் நீக்க சுந்தர்ராமனுக்கு அனுமதி அளித்ததோடு, பீகார் கிரிக்கெட் சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.