Published:Updated:

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

Vikatan Correspondent
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து அணு உலைகளிலும் வெளியாகும் அணு உலைக்கழிவுகளை சேமித்து வைக்க நிரந்தர இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

மேலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், 15 வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் அணுமின் நிலையத்தில் பின்பற்றப்படவில்லை" எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது, கூடங்குளம் அணு உலையில் தரமற்ற உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதாடினார். மேலும், கூடங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் பிரசாந்த் பூஷண் கேட்டுக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன் பராசரன், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கூடங்குளம் அணு உலையில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கியது. கூடங்குளத்தில் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழுத் தேவையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தின் பெரும்பாலான பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.