Published:Updated:

உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்திலிருந்து விலகினார் கோபால் சுப்பிரமணியம்!

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்திலிருந்து விலகிக் கொள்வதாக மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியம் கூறுகையில், ''உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு நீதிபதியைத் தேர்வு செய்யும் முடிவானது கண்ணியமான முறையில் எடுக்கப்பட வேண்டும். மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே எனது இந்த முடிவுக்கு காரணம்.

நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர் அமித் ஷா குற்றவாளியாக கருதப்படும் சோராபுதின் போலி என்கவுண்ட்டர் வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவி புரிந்தற்காகவே என் மீது பழி சுமத்துகின்றனர்" என்றார்.

சுப்பிரமணியத்தின் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள பாரதிய ஜனதா கட்சி, ''கார்பரேட் தரகர் நீரா ராடியாவுடன் சுப்பிரமணியத்திற்கு உள்ள தொடர்பு வெளியானதாலேயே அவரின் நியமனத்திற்கு ஆதரவளிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளது.