Published:Updated:

சூரத் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை!

Vikatan Correspondent
சூரத் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை!
சூரத் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை!
சூரத் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை!

புதுடெல்லி: சூரத் குண்டுவெடிப்பில் தொடர்புடைய  குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1993ஆம் ஆண்டு சூரத் நகரில் பயங்கரவாதிகளால் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் பள்ளி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 38 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 11 பேரை கைது செய்து சிறையிலடைத்தது சூரத் காவல்துறை.

கீழ் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய 11 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.