Published:Updated:

நிலக்கரி ஊழல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Vikatan Correspondent

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

இந்த ஊழல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்கவும், அரசு தரப்பில் வாதாடுவதற்காக தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களை நியமித்து அவர்களின் பெயர்களை தெரிவிக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரம் வெளியான பின்னர் தனியாருக்கு ஒதுக்கப்பட்ட சுரங்க லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இதை எதிர்த்து தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.